பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பாகை 8 வரம்பெற்றான் பண்டாரத்தின் சைகையில், கடலை மாடன், மனைவியை தூக்கி நிறுத்தி, வைகுண்டரின் அருகே அவளை தலை கவிழ்த்தி நிற்க வைத்தான். பிறகு பண்டராத்தின் மவுன ஆணையின்படி அவனே விளக்கினான். ஆரம்பத்தில் வார்த்தைகள் அவனோடு மல்லிட்டன. ஆனாலும், அந்த வைகுண்ட பார்வையில் வார்த்தைகள் கயம்புகளாயின. "ஆம்பிளையான எனக்கே சொல்லமுடியவன்னா. அவள் பொம்புள. சொல்ல முடியாதுதான். சொல்லுததுக்கே உடம்பு கூகதுய்யா. ஆனாலும் அய்யாகிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்ல? அந்த மேல்சாதிக்காரன் என் பொஞ்சாதி மார்ய பார்த்து அதோடு பேரே சொல்லச் சொல்லி இருக்கான். இவள். அலறிப் பயந்து. கண்ணிரும் கம்பலையுமா மார்பு சாமி, நெஞ்சு சாமின்னு" தட்டுத் தடுமாறி சொல்லி இருக்காள். உடனே அந்தப்பாவிப்பயல், நடக்கம்புல இருக்கிற கொக்கியவச்சி இவளோடு மார்புமுனையை திருகிக் கிட்டே'இதோட பேரச்சொல்லுன்னு அதட்டி இருக்கான். இவள், கோவத்துல அந்த பிரம்ப பறிச்சி கீழ எறிஞ்சிருக்காள் இதனால கீழ விழுந்த அந்த சீக்காளிப் பய. கீழ கிடந்தபடியே, விழுந்த கம்ப எடுத்து, இவள அடிஅடின்னு அடிச்சிருக்கான். அடிச்சாக்கூட தேவல. நாளைக்கும் வரப்போறதாயும், இவளோட மார்பு முனையை பழையபடியும் கம்புபோட்டு திருகப் போவதாகவும் இவள் முலைக்காம்புன்னு சொல்லுதது வைரக்கும் இவள விடபோறதுல்லன்னும் சபதம் போட்டிருக்கான். அய்யா எங்கள ஒண்னு இங்கேயே சேத்துக்கணும். இல்லாட்டா எங்கள மானத்தோட அனுப்பணும். இதுக்கு மேல, எங்களால தாங்க முடியாதுய்யா, கடலை மாடனின் ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு கேம்பலாய் வெளிப்படுத்திய ஆண்டிச்சி, இறுதியில் அய்யா. என்ன பெத்த அய்யா. என்னை. இந்த அவமானத்தில இருந்து காப்பாத்துமுய்யா. அய்யாவே அடைக்கலம். புருசனும் வீரமில்ல.