பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 க. சமுத்திரம் போனவீடும் சரியில்ல நான் குலமான். என்ன இப்படி பண்ணிட்டானே அய்யா. உம்மகிட்ட சொல்லாம யாருகிட்டே சொல்லுவேன்? அவன் அப்படி பண்ணும்போது, நான் எங்க குலதெய்வம் உதிரமாடனத்தான் நெனச்சேன் ஆனாகெட்டதுலயும் ஒரு நல்லது மாதிரி இங்க நடந்தத, ஒன் பனையேறி சாமிகிட்ட சொல்லு. அவன்.என்னத்த கிழிச்சிப்புடுறான்னுபாப்போம்முன்னு: கொக்கரிச்சான். அவனாலதான் இங்க வந்தேன் அய்யா, வைகுண்ட மந்திரத்தை மெல்ல வெளிப்படுத்திக் கொண்டிருந்த கூட்டம் மவுனமானது. வண்டுகள் போல் மொய்த்த மக்கள், இந்திய வரைப்படத்தின் தட்சினம்போல் இடைவெளி கொடுத்து நின்றார்கள். வரம்பெற்றான் பண்டாரத்தின் வாயையே பார்த்தார்கள். அவரோ, ஆண்டிச்சியை ஒரு பார்வையாகவும், வைகுண்டரை மறுபார்வையாகவும் பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கத்திற்கு மாறாக வைகுண்டர் எழுந்தார். அவர் அடியும், முடியும் ஆடி, பின்னர்பாதாததிகேசம் வரை குலுங்கியது.கண்ணன், ஐந்து தலை நாகத்தின் மேல் நின்று ஆடியது போன்ற ஆட்டம். சிவனின் ஊழியாட்டம் போன்ற உடலாட்டம். மாகாளியின் உக்கிரப் பார்வை. ஆவேசப்பட்டவராய் வரம்பெற்றான் பண்டாரத்தைப் பார்த்து ஒரு நாமக்கட்டியையும் துண்டையும் எடுத்துட்டுவா’ என்றார். அவைவருவதுவரைக்கும் ஆண்டிச்சியைப் பார்த்து, தன் கரத்தை முருகனின் அபயக்கரம்போல் ஆக்கிக் கொண்டார். அவளும் பாரம் இறக்கியவளாய் தனது அண்ணாச்சியின் வயதுள்ள அவரை மூலப் பரம்பொருளாய் காலப் பழமையாவும், புதுமையாவும் பார்த்துக் கொண்டே நின்றாள். நாமக்கட்டி வந்ததும், வைகுண்டர், அதில் முத்திரி நீரிட்டு, ஆள்காட்டி விரலால் ஒரு அழுத்து அழுத்தி, ஆண்டிச்சிக்கு வெள்ளை நாமம் சாத்தினார். பிறகு அவள் கணவனுக்கும் அதை சாத்திவிட்டு, பண்டராம் கொடுத்த துண்டை எடுத்து அவன் தலையில் தலைபாகையாய் கட்டினார். பின்னர் அவனையும்