பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்பாகை 83 கூட்டத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே உச்சக் குரலில் ஒலித்தார். "என் மக்கா! இன்று முதல், நீங்கள் வெள்ளை நாமம்தான் சாத்த வேண்டும். செம்மண் நாமம், எதிரிக்கு தெரியவில்லை. இனிமேல் நன்றாய் துலங்கும் இந்த வெள்ளை நாமம் மூலம் சாதியின் பெயரால் ஏழை எளியவர்களை வதை செய்யும் அறக்கேடர்கள், நம்மை இன்னும் அதிகமாகவம்புக்கு இழுப்பார்கள். நான், அவர்களின் வம்பை வளர்த்து, பிறகு அழிப்பேன். இதில் சந்தேகம் வேண்டாம். தோளில் துண்டுசுடட போட்டுக்கொள்ள தடைச்செய்யப்பட்ட என் மக்கா இனிமேல் நீங்கள் தலைப்பாகை கட்டிக் கொள்ள வேண்டும். இங்கே உள்ள பதிக்கும் தலைப்பாகை கட்டியே நீங்கள் வரவேண்டும். ஒரு காலத்தில், நமக்கு உரிமையான உருமாக்கட்டில் கிடைத்த கத்தி தேவையில்லை. நெற்றியில் துலங்கும் ஒத்தை வெள்ளை நாமமும் அரகர சிவ சிவ என்ற மந்திரமும் கலி நீசனை பயமுறுத்தும்.” அரிசி மூட்டைகள், விறகுக் கட்டுகள் போன்றவற்றை எளிதாக கமக்கும் கடலை மாடனுக்கு, அந்த தலைப்பாகை பெருஞ்சுமையாய் வலித்தது. தலையே போனதுபோல் தவித்தான். ஒன்றும் புரியாமல் பேந்தப் பேந்த விழித்தான். இதை புரிந்து கொண்ட வைகுண்டர், அவனுக்கும் அவன் மனைவிக்கும் சொல்வதுபோல், அனைவருக்கும் உபதேசித்தார். அவர் உபதேசம் பாட்டாயும், உரையாயும் ஒலித்தது. "கீழது எல்லாம் மேலது ஆகும். மேலது எல்லாம் கீழது ஆகும். குகையாளப் பிறந்த என் குழந்தாய் எழுந்திரடா. இந்த அய்யா, ஒனக்குன்னு ஒன்றும் செய்யலுன்னு யோசிக்காதே மகளே... உன் ஆமக்கனுக்கு தலைப்பாகை கட்டி, அவன மனுசனாய் ஆக்கிட்டேன் இனிமேல், இவன் உன்மேல் ஒரு துரும்புகூட விழுவதற்கு விடமாட்டான். அய்யா உன்கூடவே இருக்கேன். நடைகம்பு வைத்தவன் நடைபிணமாவான். 'குலைய