பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. க. சமுத்திரம் விடாதிருங்கோ. குரு நினைவை வை. பக்தி உள்ள மக்களுக்கும். புத்தி உள்ள மக்களுக்கும். பயங்கள் தெளித்து வைப்பேன்.பதறாதே என் மக்கா. நாம ஆடுகள் அல்ல மக்கா. மாடுகள் இல்ல மக்கா. கிருஸ்துவ பெண்கள் வருசக் கணக்கா நடத்துற தோள்.சில போராட்டதுல நீங்களும் கலந்துக்கணும். ஆணுக்கு தலைப்பாகை. பெண்ணுக்கு மாராப்பு. நெஞ்சுக்கு அரகர சிவ சிவ. இந்த அறக்கேடர்கள இந்த மூணுமே வதம்செய்யும். கலங்காதீங்கமக்கா. நடத்திக் காட்ட நான் இருக்கேன்" - சிறிது நேரத்தில் வைகுண்டர் உணர்ச்சியின் உச்சத்தில் இருந்து, நிதானத்தின் அடிவாரத்திற்கு வந்துவிட்டார். ஆண்டிச்சியையும், அவள் கணவனையும் நான் இருக்கேன் என்ற தோரனையில் பார்த்தார். பின்னர், பின்னால் நிற்கும் அவர்களைப் போன்ற எளியவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆண்டிச்சிக்கு, கடலை மாடனுக்கும் கண்களால் விடை கொடுத்தார். எளிய கூட்டம், எரிமலை கூட்டமாகிறது. ஒற்றை மனிதனாய் மாறி, அரகர சிவ சிவ அய்யா என்ற சொற்கள், போராளித் தனமாகின்றன. அந்த மனித தலைகள்மீது எண்ணில்லா கரங்கள் தலைப்பாகைப் போல் கருள்கின்றன. வலது கை விரல்கள் பஞ்சபூதங்களாய் பரிணமிக்கின்றன. கூட்டத்தில் பெரும்பகுதியினர், தத்தம் தூக்கு பையில் வைத்திருந்த மாற்று வேட்டிகளை எடுத்து, வைகுண்டரிடம் சமர்ப்பிக்கிறார்கள். சிலர், மாற்று வேட்டியில்லாத எளியவர்களிலும் எளியகோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்காக, தத்தம் வேட்டிகளை மூன்று துண்டுகளாக்கி அந்த அய்யாவிடம் கொடுக்கிறார்கள். வைகுண்டர், அந்த துண்டுகளை உயிர்ப்பித்ததுபோல், ஒவ்வொருவர் தலைக்கும் கிரீடம் சூட்டுவதுபோல் தலைப்பாகைக் கட்டிவிடுகிறார். மூன்று நாழிகை வரை, அவரது கைகள் ஒயவில்லை.