பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ளமேடு

                                                              17.03.90
  பேரன்புடையீர்
         தங்கள் மேலான புலமைக்கும், அருள் சார்ந்த தகுதிக்கும் என்

பணிவன்புடைய வணக்கமும் வாழ்த்தும்.

    தலைவனைப் பற்றிய தங்கள் கருத்துரை கிடைக்கப்பெற்றேன். மூன்று

அக்னிகள் என்பது மட்டும் நீங்க, மற்ற அனைத்துக் கருத்துக்களும் சரிவர ஆய்ந்து புலப்படத்தியுள்ளிகள். தங்களுடைய பல்வேறு அலுவல்களுக்கிடையே தலைவனை ஒரு பொருட்டாக மதித்து படித்துப்பார்த்து என் வேண்டுதலை நிறைவு. செய்தமைக்கு நான் பெரிதும் நன்றிக்கடப்பாடுடையவனாகிறேன் . நிற்க


     இனி என்னை நானே அறிமுகப்படுத்திக் கொள்ள அனுமதிப்பீர் என

எண்ணுகிறேன் புலிப்பாற்பட்ட ஆமாக் குழவிக்குச் சினங்கழி மூதாக் கன்றுமடுத்துட்டும் கானத்ததுவே பான பரிசிலா்க்குள்ளியது சுரக்கும் ஒம்பா வீகை வெள்வேல் ஆவ மாயின் ஒள்வாள் கறையடி யானைக் கல்லது - உறைகழிப்பறியா வேலோ னுரே. இந்த ஊரின் பெயர் வெளியம். ஊர் காடு சூழந்திருந்தது . இந்த ஊரை உறைவிடமாகக் கொண்ட குறுநில மன்னன் பெயர் ஆய் எழினி. களங்காய்க் கன்னி நாள் முடிச் சோவின் படைத்தளபதியாக இருந்தவன். இந்த வெளியங்காடு எனும் ஊள் தான் என் சொந்த ஊர் . களிறு பொரக்கலங்கும் கழல் முள் வேலி அரிதுன் கூவல் அங்குடிச்சீறுள் ஒலிமென் கூந்தல் ஒன்ணுதல் அரிவை - நடுகல் கைதொழுது பரவு மொடியாது