பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தெதிர் பெறுகதில் யானே எவ்வையும் ஒருவாய் பொருள் நசை

வேந்தனோடு நாடுதரு விழுப்பகை யெய்துக வெனவே.


இது தான் நான் கற்ற அறநெறி இலக்கியம்

அடலருந்துப்பின் கெடலரும் படப்பை - கோங்கு வேங்கை குருந்தே

முல்லையென் றின்நான் கல்லது பூவுமில்லை. கருங்கால்வரகே யிருங்கதிர்

தினையே சிறுகொடிக் கொள்ளே- பொறிகிவ ரவரையோ டின்னான் கல்லது

உணவுமில்லை ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி ஒளிறேந்து மருப்பின்

களிறெறிந்து விழ்ந்தெனக் கல்லே பரவி னல்லது நெல்லுகுத்துப்பரவும்

கடவுளருமிலரே.


இதுதான் நான் கற்றறிந்த தமிழக வரலாறு.

ஈன்று புறந் தருத வென்றலைக் கடனே எனும் முறையில் தலைவனை நான்

பெற்றுத் தந்துவிட்டேன். மேலும் சான்றோனுக்குத் தந்தையும்,

வேல்வடித்துக்கொடுக்கும் கொல்லனும் நன்னடை நல்கும் வேந்தனும் என்

தலைவனுக்கு வாய்த்தால் அவன் நிச்சயம் களிறெறிந்து பெயர்வான் என்ற

நம்பிக்கை தங்களது அறிவு சால் கருத்துப் பேருரையால் நிறைவுறும். நாடும்

நலம் பெறும் என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                            இங்ஙனம்
                                                       தங்கள் நன்றிமறவாத


                                                      வெள்ளியங்காட்டான்