பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவர் - ஒரு மதிப்பீடு

                                                      டாக்டர் மா . இராமலிங்கம், 
                                                      பேரா. தலைவர்,
                                                      தமிழியல்துறை ,
                                                      பாரதிதாசன் பல்கலைக்கழகம்
                                                      திருச்சிராப்பள்ளி - 620 02:

கவிஞர் வெள்ளியங்காட்டானின் தலைவன் என்னும் பாவியம் இருபதாம் டான்டின் இறுதியில் எழுதப் பெlறுள்ள வெண்பா யாப்பிலான இனிய நா ல் , மிகச் சிறந்த மரபுக் கவிஞரான வெள்ளியங்காட்டான் தன் வாழ்வினபட்டறிவினையும் கல்வியறிவினையும் இணைத்து இந்நூ லை யாத்துள்ளார் . நாட்டை நன்னெறிக்குய்விக்கும் நூ ல் கள் அண்மைக்காலத் தே தோன்றாத குறையினைப் போக்கி நிறைவு செய்ய வல்லது , தலைவன் என்னும் இந்நூ ல். அறநெறிச் சிந்தனைகளையும் ஆன்மீகச் செய்திகளையும் ஆய்ந்து தெளிந்து எளிய வெண்பாவின் வாயிலாக வெளியிட்டுள்ள கவிஞரின் சமுதாயப் பணி போற்றுதற்குரியது . . அரசியல், பொருளியல் நோக்கில் தடம்புரண்டுவிட்ட இன்றைய உலகை நெறிப்படுத்த வேண்டும் என்ற கவிஞரின் உள்ள வேட்கையை இந்நூ ல் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது . - - - . எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனோ - என்னும் புறநானூ lறுப் பொன் - மொழியை நெஞ்சில் கொண்டு நோக்கின் தலைவனின் சிறப்பும் பண்பும் தெற் றெனப் புலப்படும். இந்நூ ல் சமத்துவம் , சகோதரத்துவம், சுதந்திரம் என்னும் - மூன்று ப்ெரும் பிரிவுகளைக் கொண்டிலங்குகிறது. ஒவ்வொரு பிரிவும் இருபது உட்தலைப்புக்களையும் ஒவ்வொரு தலைப்பும் பன்னிரண்டு வெண்பாக்களைக் கொண்டும் நூ ல் சிறப்புற்றுள்ளது . நா ல் முழுமையும் பல்வேறு .ெ ய T lெ சுவைகளைக் கொண்ட வெண்பாக்களைக் கொண்டிருந்தாலும் அவற்றிலெல்லாம் சமுதாயத்திற்குத் தேவையான நல்வழிச் சிந்தனை உயிரோட்டமாகத் திகழக் காணலாம் . கொள்ளுவார் கொள்ளும் வண்ணம் நல்ல நடைநலம் சிறக்க இந் நூ லைக் கவிஞர் யாத்துள்ளார் . உபநிடக் கருத்துக்களும் ஆன்மீகக் கருத்துக்களும் திருக்குறட் சிந்தனைகளும் இடையிடையே இந்நாலில் பயின்று வரக் காணலாம் . இதற்கு இன்றைய ஆரவாரமிக்க உலகு அமைதியை இழந்துவிடக் கடாது என்று கவிஞரின் ஆர்வப்போக்கே காரணமாகும் .