பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபநிடதக் கருத்துக்களை எளிமையாக்கி ஆசிரியர் எடுத்தாண்டுள்ளமைக்கு வேதத்தைக் கற்று விரித்து விளக்கிடினும் பூதத்தைப் பற்றிப் புகல்வதது : – சாதத்துக் கானதொரு தந்திரமே ஆத்மிகமன் றென்கிறது கோனோ வுபநிசத் து

இந்தஎன் ஆத்மா வே ஈசனெறும் வேதாந்த விந்தைக் கருத்து விளக்கமுற - வந்துமற் றோமெனும் ஒற்றை ஒரு சொல் உணர்வேநா வாமெலும் பற்றை யறிந்து 28 6

ஆற்றற் கரியவொரு ஆம்மீக வாழ்வில்நாம் போற்றக் கருதல் புகழொன்றே - சாற்றின் அதுவே அமிழ்தம்: அழிவின்மை ஆயின் அதுவே.நா மாவ தறிந்து .

ஆகிய வெண்பாக்கள் காட்டுக்களாகின்றன. இறைவனைப் பற்றியும் உயிர்களைப் பற்றியும் உபநிடதங்கள் சாத்திரங்கள் கூறு்ம் கருத்துக்களைத் தெளிந்து கவிஞர் விளக்கியுள்ள திறம் சிந்தித்தற்குரியது . தத்துவச் சாரச் செய்திகளைத் தொகுத்து விளக்கியுள்ளார். நான் என்றும் தன்முனைப்பையடக்கி நலம்பெற வேண்டும் எனவும் அழியுமுடலைக் கொண்டு அழிவற்ற புகழைத் தேடவேண்டும் எனவும் உயிர் ஊக்கச் செயல்களைக் கவிஞர் உலகுக்களித்துள்ளார் . வாழ்வுக்குறுதி பயக்கும் நல்லொழுக்கமும் நற்செயல்களும் நல் சிந்தனைகளும் மனிதகுலம் முழுமையும் ஏற்றுப் போற்றிக் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாங்கில் இந்நூ ல் அமையக் காணலாம்.

இவரது பாடல்களில் சித்தர்களின் சிந்தனைகளும் இடையிடையே விரவிக் காணப்படுகின்றன.

             அன்றே அறிஞர் அறிவித்தார் : அக்விகள் 
             ஒன்றா யுடலின்மூன் முன்டெனவே - ஒன்றால்
             உணவு செரித்தல் , உயிர்காத்த லொன்றால்
             குலம் கட்டவொன்றால் குறித்து (29 : 2)

இப்பாடலில் சித்தர்களின் கருத்து உட்புதைந்துள்ளமையை உணரலாம். அன்றோர் தங்களது வாழ்வில் கண்டு தெளிந்ததை இலக்கியமாகவும், வாழ்விலிக் கனமாகவும் வகுத்தும் தொகுத்தும் பல்வேறு வடிவங்களில் விட்டுச் சென்றுள்ளனர்.