பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கோமதி


காலையைக் கன்டான். கழனியைக் காணப்போய்
மாலைவைக் கவிடான், மனமொன்றி-வேலையைக்
கண்ணும் கருத்துமாய்க் கண்டான்கால், ஊர்காண
என்னவே ஏகிற் றிசைந்து .

"சொல்குறைத்துத் தொல்லையெனச் சோரா துழைப்பார்க்கு
நெல்குறைத்த தில்லை நிலமென்பான், அல்குறைத்துக்
கொண்டகருங் கூந்தலெழில் கோமதியி னில்புகுந்தான்
உண்டுறங்கித் தீர உவந்து .

அப்பா அகத்தை யணுகுங்கால் அன்புமகள்
துப்பாய் முகத்தைத் துலக்கிக்கொண் -டப்போது
தப்பாது நின்று தலைவாசல் காத்திருந்தாள்,
ஒப்பேது மின்றி யுணர்ந்து !

வண்ணத் திருவடிவு வாணி கடைக்குட்டி
நண்ணிச் சிரிக்க நயந்தணைத்தென் - கண்ணேயென்
'றிச்' சென்று முத்த மிடும்போதே என்கன்னம்
எச்சி லெனக் கத்திற் றிரைந்து !

பசியகல வுண்டும் பரிவகலாப் பண்டைக்
குசியகலக் கொண்ட குயிலை - நிசியகலக்
கூடிக் களித்தநாள் கூடாது , கூடிற்றின்
றூ டிக் களித்தவொரு நாள் !

ஆவலொடு மன்னம் அரிப்பினா வாளவரும்
சேவலொடு முன்னிச் சிரிப்பின்றிக்-காவிலுடன்
போவதென நோக்கிப் புகழோன்பின் போனாள். பொப்
நோவதனை நீக்க , நுவன்று

மூச்சாட லன்றி முறுவல் முகம்மூசப்
பேச்சாட லொன்றாப் பெருந்தகையை -ஏச்சாட
எண்ணினா ளன்றா லிதயத்திற் கேற்கும்சொல்
கண்ணினா ளொன்றிக் கனிந்து !

'தேகத்துக் கேற்றதெ' னத் தேர்ந்த நடைப்புரவி,
வேகத்துக் கேற்றதெனும் வில்வண்டி, -ஏகத்தான்
நீண்ட நிழல்சாலை நேர்ந்தும், நடந்துசெலல்
வேண்டி விழையுமிக் கால் !

காலங் கருதிக் கழனியுழு திட்டபயிர்க்
கோலங் குகருதிக் குறையகற்றிச் -சீலங்கொன்
டோயா துழைத்தோ ருளங்குளிர வுள்ளதனைக்
காயா தளித்திடும், கை !

காற்றோ மழையோ கடும்வெயிலோ கங்குலிலே
ஆற்றா திழையும் அரும்பனியோ -கூற்றாகித்
தாக்கினும் தாங்கும் தளராத தறுகண்மை
யூக்கியுரம் தேங்கும் உடல் !

குயிலாகிப் பாடினும் கூர்வேல்கண் கூர்ந்து
மயிலாகி யாடினும் மாதர் -அயலாயின்
ஏறெடுத்துப் பாராம லேகும் திசைபார்க்கும்
வீறெடுத்துத் தீரும் விழி!

போதவே ஓர்ந்த புலவர்வாய்ச் சொல்லாக,
ஓதவே ஓரார் உரையாகச்- சாதுவாய்த்
தப்பாது வேட்கும் தலைவனெனத் தானறிந்து
செப்பாது கேட்கும் செவி!