பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. உபதேசம்

                -------------

சிந்தனை யெ்து யெலாற்றும் செல்விவாய் வந்தனை செய்து வழங்கிய சொல் - நிந்தனையை ஆற்றும் அருமருந்தா யன்பை யகத்துறுத்தி மாற்றத் திருந்தும், மனம்.

உள்ளார்ந்த வுண்மை யுபசரிப் புள்ளத்தைக் கள்ளார்ந்த வண்டாய்க் களிப்பிக்கப் - புள்ளோர்ந்து சோலையுற வெய்திவெயில் சோகம் தணிந்ததென மாலையறச் செய்தான் மதித்து !

“காதலன் கண்மலர்ச்சி காண்பதே கற்படைய மாதர் மனமகிழ்ச்சி மன்னவனே ! -வேதனையா யுள்ள முறுத்திக்கொண் டுள்ள குறைதவிர்த்துக் கொள்ளல்நன்” றென்றாள் , கொடி !

உறுப்பொத் துயர்த்தி யுரிமையுறத் தொட்டுச் சிறப்பித்த தற்கிச் சிறப்பென் - றறப்பித்தன் கட்டி யணைத்துக் 'கனிவாய்க் கொருமுத்தம் மட்டு' மென் றிட்டான் , மகிழ்ந்து !

“ வாடும் பயிருக்கு வானம் வழங்கல்போல் ஊடும் மயிலுக் குதவுகிறேன் :- வீடுறவே உன்னை யுலகத் தொளிர்விக்கும் , உள்ளத்தில் மின்னா யிலங்கிடின் , மெய் ! ...”

“அஞ்சா தலரும் அறிவாற்ற லன்பனைத்தும் எஞ்சா திலங்கும் இதயமினி - மஞ்சாகி மூடி மழையாய் மொழியாங்கொல் ” , என்றாள்மற் றூ டி மொழியா ளுவந்து .

“போதுமடீ! போதும்: புலரும் பொழுதுவரை ஏதுமிடை யிட்டொன் றியம்பாதே - மேதையெனத் தீதுநான் றோர்ந்து தெளிந்து திகழ்ந்திடநாம் சாதுவாய்த் தீர்ந்தால் சரி !

முல்லை மணங்கமழும் முன்றிலென என்றுமுளம் நல்ல , குணங்கமழ நட்புறவுக் -கொல்லவே இல்லை 'யெனச் சொல்லா தினியவே செய்வததன் எல்லையெனக் கொள்வ தினிது !