பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5. இரக்கம் –––––––––––

" 'இரவுவரி னஞ்சும் இளமகவை யேற்பான்;
பிரிவுவரி னஞ்சிப் பிதற்றும் -பெரியவரை
மன்னித்துக் கொள்ளான் மறவ னெனும்சொல்லை
முன்னொத்துக் கொள்ளல் முறை !

ஆள்வேன்டு மென்றின் றவதியுறு மாறன்று
கேள்வேன்டு மென்று கிளப்பியதேன்?-தாள்வண்டிே
ஒன்றியுடல் நின்றவுயிர்க் கொப்பான தம்பியை நீர்"
என்றவள் ,மற் றொன்றி யிருந்து .

"இருள்சூழ்ந்த வீட்டுக் கெழில்விளக்கா யென்றும்
அருள்சூழ்ந்த ஆட்டங்க ளாட்டி -மருள்சூழ்ந்த
மக்கள் மனத்தில் மகிழ்ச்சி மலர்த்துகிற
சொக்கப்பொன் ஒக்கும் சுதன் !

வீடு விளங்க விருப்ப மறிந்துதவக்
கூடப் பிறந்த குணக்குன்று -வாடிடவே
சீர்கெட்ட சிந்தைச் செருக்கனது சேவைக்கு
நேர்கெட்டு நீக்கினீர், நீர் !

அறிவுறுத்திக் கூறும் அருகதைமற் றற்றும்
உறவுறுத்திக் கூறுமென் னுள்ளம் செறிவுறுத்தி
வீடுவிட்டு வாழ விரும்பாத தம்பியை நீர்
வாடவிட்டு வாழ்தல் வசை !

துய்ய மலரையுளம் , தூ யோர் தொடல்போல்நா
முய்ய மலர்ந்த் வொருமகனை மெய்யுறுத்தித்
தம்பி தழுவித் தழுதழுத்து நின்ற நிலை
நம்பவிய லாநன் னிலை!

கண்ணையும் காதையும் கல்விக் களித்தவனைப்
பண்ணையைப் பார்க்கப் பயிற்றரியொரு - பெண்ணையும்
தேடி வியக்கத் திருமணம் செய்திருந்தால்
நாடு வியக்கும், நயந்தி !

கூடப் பிறந்த குலக்கொழுந்தின் கோலமுகம்
வாடத் துறந்து வலுவிழந்தோழ்-காடுகரை
பாடற்ற தாகிப் பயனற்ற "தென்றாள். மற்
ற"டற்ற தோகை யினைந்து !

"கங்கையெனக் கண்ணீர் கவிழ்க்குமென் கண்ணன்ன
தங்கை மனப் புண்ணைத் தவிர்த்திடநான் - அங்கிவனைச்
சென்றிருந்து வாவென்று செப்பினேன்; சேர்ந்திருந்து ,
'நன்றெ'ன்றாய் நீயும், நயந்து !

'போனதைப் பற்றிப் புலம்பவேண் டாமெ'ன்று
நானிதைப் பற்றி நவின்றிருந்தும், - ஏனதைநீ
யெண்ணாது தம்பி யிசைக்குவகை யேற்றுகிறாய்
கண்ணேயின் றெ"ன்றான், கரைந்து :

'சிற்பக் கலைஞன் செயல்திறனைச் சீர்சாலா
அற்ப ரறிதல் அரிதெ'ன்பர்; பொற்புடையாய் !
கற்பதனைக் கற்றுக் கலை நுணுக்கம் கானார்சொல்
பிற்பயக்கும் தொற்றாப் பணி!

'உற்றதுணை யுள்ள'மென ஓர்ந்தா ரொருவாது
பெற்றதுணை விள்ளின் பெரும்புகழே; - மற்ற்துணை
சிந்தித்துச் சீராய்ச் செயல்படுதல் , சீர்சால்பாய்
நிந்தித்தோர் ஓர நினைத்தி !