பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயர்திரு தமிழ்துறைத் தலைவர் அவர்களுக்கு,

வணக்கம்.

கண்டதைக் கற்றுக் கசடற்றோன் காசினியில்
பண்டிதன்கா யென்னும் பழமொழியொன் -றுன்டதிலே
சேர்ந்தவன்தான் நாமெனச் செப்புகிறேன், செந்தமிழை
யோர்ந்தவர்தா மோர வுளத்து.

அறமறிந்தே னாராய்ந் தறிஞரின்நூ லாங்கே
புறமறிந்தேன் போதம் பொருந்தத் -திறமறிந்தேன்;
தன்னைத்தா னாகும் கலைவனையும் தந்தேன்மற்
றென்னையா னாள விருந்து .

தூய வுணர்வொன்றித் தூய வுனர-யொன்றித்
தூ.ய செயலொன்றின் தொல்லுலகில்-தீயவைக
ளஞ்சி யகலு மறிவுநிலை யாமறுநம்
நெஞ்சுரமாய் நிற்கும் நிலை .

வான முளமாகி வாய்மை யிளங்கதிராய்
ஞானமே நாம்வாழும் நாளாயின் - சினம்தான்
தங்குமிட மாகாது தார்மிகமா யின்பமது
பொங்குமிட மாகும் புலன்.

பூரணமாய் ஞானம் புரிய வைக் காதவொரு
காரணமாய் வந்த கடுந்துயரம்-நேரணுகி
ஆராய்ந்தோ ரொன்றி யறிவிக்கும் போதன்றிப்
பேராத தாமிப் பிணி.

தேசுக்கு வாழுவ தேராது தேசத்தில்
காசுக்கு வாழுவது கற்பித்தார் -நேசிக்கும்
உள்ளமே யில்லாதா ருண்மைக்கு நேர்மாறாய்
எள்ளவே கல்வா யிகத்து .

மட்டுமித மற்ற மலமகிழ்ச்சி மானமொடு
மட்டுமித மற்ற மனமறுக்கம் -மட்டுமித
மற்ற மனத்தளர்வு மன்றுமெனின் மட்டுமித
மற்று மடியும் மனம் .

காசே குறியான காரணத்தால் கண்ணியந்தான்
மாசே குறியாகி மாறியதோ -சேசேசே
செந்தமிழ் நாட்டின் சிறப்பனைத்தும் சீரழிக்கும்
சொந்தசுகச் சூழ்ச்சிச் சுழல் .

அழிவுக் குரியவை யாய்ந்தகற்றற் கஞ்சின்
இழிவுக் குரியவர்க ளாவோம்-மழவரென
வாழ்ந்தோரும் வார்த்தை வலுவிழந்து வையத்தில்
தாழ்தோராய்த் தீர்வர் தளர்ந்து.

கள்ளச்சா ராயம் கழுத்தறுப்பு கற்பழிப்பு
எள்ளலழ லின்ன இழிவுகளால் -வெள்ளமெனக்
கண்ணீர் பெருக்கிக் கனல்வார்தம் கைநெறிக்கும்
புண்ணாற வேண்டும் புவி.

“எவ்வழி நல்லவர்ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்னும் புறநானூற்றுப் பொன்மொழியை நினைவுறுத்திக் கொண்டு ‘தலைவன்’ எனும் இந்நூலைப் பற்றிய தங்கள் மேலான மனோநிலையை அன்புடன் அறிவிக்கக் கோரும்––