பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52. தாங்காமை
– – – – – – – –

“அகத்தூ ய்மை யாக்க வறிவென்ப ரான்றோர்,
முகத்தூ ய்மை யாக்கல் முறையென்பர், –இகத்தூய்மைக்
கிவ்விரண்டு மேற்புடைத் தென்றறிந்தா னென்தம்பி
செவ்விபெரி தென்றான், சிலிர்த்து!

கோவில் சிலையாய்க் குறுநகைபோய்க் குன்றியுளம்
சாவில் தலையைச் சரித்ததுபோல்–கேவலொடும்
பேச்சடங்கும்; சீலத்தைப் பேணுவோன் பேச்சால்பெண்
மூச்சடங்கும் போலு முயிர்ப்பு!

சங்கீனும் குன்றாத் தகைமைசால் முத்தென,நீர்
செங்கமல மன்று சிதறிற்றால், –கொங்குபுகழ்
நேரிழையாள் நெஞ்சுறுதி நேயம் நெகிழ்ந்தின்று
பாரிழையா யெஞ்சப் படிந்து!

‘ஈரம் இகலா யிருந்தவிற கில், தீபின்
வீரம் மிகவாய் வினைத்த ’ தென –நேரம்
கழியத் துயர்கழியக் கல்லுருகக் கன்னி
மொழிய முயன்றாள், முனைந்து!

கொங்குத் தமிழர் குலக்கொடியின் கோலவிழி
செங்குமுத மொப்பச் சிவந்துசினம் – ‘தங்குமெழில்
மாமதியும் தட்பம் மறந்த தெ'னச்சொரிந்தாள்,
தாமதியாத் திட்பத் தழல்!

"வீட்டிருளை நீக்கும் விடிவிளக்கை வேண்டாத
காட்டிருளை நீக்கக் கணித்திட்டீர்! – காட்டிலிருள்
நீங்கவே சாது நிலையிலது நேர்ந்தெரிந்தும்
ஆங்கதனால் யாது பயன்?

ஆளானாற் காகும் – அணிகலனை யார்வமொடும்
பூணானுக் காகப் புனைவித்தீர்! –பூணான்
அருமை யறியா தணிகலன்வீ ணாக்கிப்
பெருமை யுகுத்தான், பிரித்து !

நன்செய்க்குப் பாயும் நதிநீரை நாடாது
புன்செய்க்குப் பாயப் புரிவித்தீர்! –என்செய்யும்
விண்ணீர்க்குக் காக்கும் விடுநிலம் வீணாக்கிப்
புண்ணீர்போல் போக்கும் புறம்!

இன்பக் கடலில் இணைந்துவிளை யாடிடநான்
அன்புக் கடலா யயர்ந்திருந்தேன்;– துன்பக்
கடலாகிச் சார்ந்து கலங்கரையே காணாத்
திடலாகி நேர்ந்த தெனக்கு!

அண்ணனும், தம்பியும் ஆண்டகைக ளாயிருந்தும்
பெண்ணொருத்தி வெம்பும் பிறப்பானேன்;–கண்ணீரால்
உள்ளத் துயரை யுலகுணரு மாறென்றும்
விள்ளத்த காது விரித்து.

தங்கையின் தொல்லைக்குத் தங்கையே தான்கர்த்தா
பங்குங்கட் கில்லை பகிர்ந்துகொளக் –கங்குலிலே
‘எல்லாம் தலைவிதி’யென் றெண்ணியித யம்புண்ணாய்ச்
சொல்லா துலைதல் சுகம்!..”

குடிகொண் டிருந்ததுயர் கோபமாய் மாறி
வெடிகுண்டு போலும் வெடித்துக்–கடிகொண்ட
அண்ணன் செவியை அடைத்ததுகாண், ஆருயிர்தான்
விண்ணென் றவிய விழுந்து!