பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானுடைய ஜீவன் - f{}} செலவாகிறது. ஆல்ை ஜப்பான் தனது லோகத்தில் ஒரு தேவ ஸ்ந்நிதியின் ஸ்பர்சத்தை உணர்ந்தாள். ஆதலால் அவளுடைய ஆத்மாவில் பக்தியாராதனம் எழுந்தது. அவள் இயற்கையை வென்றதாகச் செருக்குரை சொல்லவில்லை. அளவில்லாத ஜாக்ரதை யுடனும், மகிழ்ச்சியுடனும் இயற்கைக்கு ப்ரே மாஞ்சலி செலுத்துகிருள். அவளுக்கும் உலகத் துக்கும் உள்ள .ெ த ா டர் பு ஆழ்ந்த உள்ளத் தொடர்பு. இந்த அன்பாகிய உயிர்த் தளையை அவள் தனது குன்றுகளுடனும், கடல், ஆறுகள், பலவிதமான புஷ்ப விஹாரங்களும், கிளேக் காட்சி க ளு மு ைட ய வனங்களுடனும், ஏற்படுத்திக் கொண்டாள். காடுகளின் பெருமூச்சையும், கிசு கிசுப்பையும், ஹ்ருதயத்தில் வாங்கிக் கொண்டாள். அங்ங்னமே, அலைகளின் விம்முதல்களையும், ஸ்குர்ய சந்திரரின் ஒளி, நிழல்களின் ஸகல கலா பேதங் களையும் கற்றுனர்ந்தாள். சோலேகளிலும், உப வனங்களிலும். வயல்களிலும் ருதுக்களின் வரவைக் காணும் பொருட்டுக் களிப்புடன் கடைகளைச் சார்த் தினுள். உலகத்தின் ஆத்மாவுக்கு இங்கனம் நெஞ்சு திறத்தல் உங்களிலே சில செல்வர் மாத்திரம் செய்ய வில்லை. இது புத்து நாகரிகமொன்றின் பலா

f

காரத்தால் ஏற்பட்டதன்று. ஐகத்தின் ஹ்ருதய திலே ஒரு புருஷ னக் காண்டதாகிய ஆத்மாதுபூதி உங்கள் நாகரிகத்திலும் வடிவு கொண்டது. மனிதரை யெல்லாம் பந்துக்களாக நினைப்பது உங்கள் நாகரிகம். ஆதலால் உங்களில் அரசுக்குச் செலுத்த வேண்டிய கடமை தந்தைக்குச் செலுத்த வேண்டிய கடமை போலாயிற்று. உங்கள் ஜாதி ஒரு குடும்பமாயிற்று. சக்ரவர்த்தி அதற்குத் தல, பிறரை அடித்தல், தம்மைக் காத்தல் என்ற இரண்டு நோக்கங்களுக் காக உண்டான ஆயுதக் கூட்டுறவினின்றும் உங்கள்

ஜாதியொற்றுமை பிறந்ததன்று. பிற நாடுகளின்

o