பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி கற்பிக்கும் பாஷை

பயிற்சியாகிய ஜீவநதி அவர்களுக்கும்போய்ச் சேர்வ தற்குரிய வாய்க்கால்கள் இருந்தன. ஆதலால், வேறெவ்விதமான குறைகள் இருந்தாலும், ஜன. ஸ்மூஹம் தன்னிலே தான் நிறைவு பெற்றிருந்தது.

நமது தற்காலத்து அன்னியக் கல்வியோ அப்படியில்லை. இது பள்ளிக்கூடம் அல்லது கலா சாலையுடன் நின்று போகிறது. அந்தப் படிப்பை நாம் பள்ளிக்கூடத்திலேயே குறிப்பலகைபோல் கட்டித் தொங்கவிட்டு வருகிருேம். அது நம்முடைய உயிரில் கலக்கவில்லை; அது நம் குறிப்புப் புத்தகங் களில் அடங்கிப் போகிறது. நமதெண்னமாகவும் செயலாகவும் உருமாறுவதில்லை. நமது தேசத்து வித் வான்களில் சிலர் மேற்படி கல்வியின் அன்னியத் தன் மையே இதன் காரணம் என்று சொல்லுகிரு.ர்கள். இதை ஏற்றுக்கொள்ள எனக்கு விருப்பமில்லை; ஏனெனில் உண்மைக்கு பூமி சாஸ்திர வரம்புகள் கிடையா. கிழக்கே கொளுத்திய தீபம் மேற்குக்

ஒளியே இல்லையெனலாம். இந்தியாவுக்கு மாத்திரந் தான் நன்மை தருமென ஒரு ஜ்யோதியிருந்தால், அது நன்மையேயில்லையென்று நான் உறுதியாகக் கூறுவேன். இந்தியாவுக்கென்று ஒரு தனிக் கடவுள் வைத்தால், அது நம்மை உலகப் பொதுவாகிய கடவுளின் ராஜ்யத்துக்குள் புகவொட்டாமல் தடுக்கும். .

உண்மையாதெனில் நமது நவீன கல்விக்குத் தகுந்த வாஹனம் கிடைக்காதபடியால், அது தாராளமாக முன்னேற்றம் பெற இடமில்லை. அறிவு மனிதருக்கெல்லாம் பொதுவென்பதை உலக முழு தும் ஒப்புக்கொள்ளுகிறது. எக்காரணத்தாலோ இந் த மாகாண த்தில் மாத்திரம் அக்கொள்கை அங்கீ காரம் பெறவில்லை; மஹான் கோகலே இந்த விஷ