பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

išŠ தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

பிள்ளைகளுக்கு மிகுதியாக்குகிருர்களா ? கல்வியை விற்பதும் விலை கொள்வதும் வழக்கமில்லாத காலமும் நமது நாட்டில் இருந்ததன்ருே ?

பிற நாடுகளில் ஜனங்களுக்குக் கல்வி தருதல் ராஜாங்கத்தார் மிகவும் அக்கறையுடன் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்ருக பாவிக்கப்படுகிறது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், ஜப்பானிலும் ப்டிப்பு விஷயத்தில் பொதுப் பணம் செலவிடக் சுசுவதே கிடையாது. ஆதலால், கல்வி அதிக ஜனங் களுக்குக் கிடைக்கிறது. எனவே படிப்பை எத்தனைக் கெத்தனை பிள்ளைகளுக்கு சிரமமாகவும் செலவாகவும் செய்கிருேமோ, அத்தனைக் கத்தனை தேசத்துக்கு நன்மையென்ற வார்த்தை எத்தனைக் கெத்தனை உயர்ந்த ஆஸ்னத்திலிருந்து எத்தனைக் கெத்தனே சத்தம் போட்டுச் சொல்லப்படுகிறதோ, அத்தனைக் கத்தனை அதிகப் பொய்யாக நமது காதில் படும்.

வயதாக வயதாக கன்ம் அதிகப் படுதல் நோயற்ற குழந்தைக்கு லக்ஷணம். கனம் அதிகப் படாமலிருந்தால் நல்லதன்று. கனம் குறைந்தாலோ பயப்பட ஹேது. அதுபோல் நம்முடைய தேசத் திலும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் தொகை வருஷந்தோறும் அ தி க ப் பட வேண்டுமென்று தேசாபிமானிகள் விரும்புகிருர்கள். ஏற்கெனவே இங்கு கல்வி நிலம் பெரும் பகுதி தரிசாகக் கிடக் கிறது. அத்தொகை மிகுதிப் படாதிருந்தால் நமக்கு வருத்தமுண்டாகிறது. தொகை குறைந்தாலோ மரணம் நேரிடுமென்றஞ்சி நம்மவருக்கு பயமுண் டாகிறது. -

வங்காளத்தில் பள்ளிப் பிள்ளைகளின் தொகை குறைந்து வருவதாகத் தெரிந்து, ஒரு ஆங்கிலோ இங்கியப் பத்திரிகை மிகவும் ஆனந்தமடைக: