பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெட்டித் தன்மதிப்பைக் காக்கக் கற்ற ஜாதியாரே தலே தூக்குவது இயல்பாயிற்று. ருஷ்யாவில் அவ்வாறு செய்யாதபடியால், அங்கே உத்தி யோகஸ்தர் காடாகப் பறந்து, ஜனங்கள் மிகச் சிறிய சர்க்கார் அதிகாரிக்கும் மிகவும் அற்பமான பழஞ் சாஸ்திரக் கட்டளைக்கும் முழந்தாள்படியிட்டு ஆண்மை இழந்து போகின்றனர்.

ஸ்மயம் (மதம்) வேறு; குருக்கள் கட்டுப்பாடு வேறு என்பதை மறக்கலாகாது. அவை ஒன்றுக் கொன்று தீயும் சாம்பரும் போலாம். மதத்தை மீறி, கட்டுப்பாடு செல்லும்போது நதியை மணல் மூடுவதுபோல் ஆகிறது. அங்கு நீர் கெட்டுப் பாலை வனம்போல் தோன்றும். இந்த நிலையைக் கண்டு மகிழ்ச்சி அடைவோர் மிகக் கேடு கெட்டவர்கள்' என்பது வெளிப்படை.

ஒருவன் மற்ருெருவனேக் கஷ்டப்படுத்தினால், இருவருக்கும் கெடுதி என்று (சமயம்) மதம் சொல்லு கிறது." - , ' . , -, - ... -- - z :- ... * * * * · * *

மகள் விதவையாகிப் பட்டினி கிடக்கும்போது, ‘இன்ன திதியில் அவளுக்குத் தாகத்துக்கு ஜல்ம் கொடுத்தால் பெற்ருேர்களுக்குப் பாவம்' என்று குருக்களின் கட்டுப்பாடு சொல்லுகிறது. பச்சாத் தாபத்தாலும் ஒருவன் பாபத்தைக் கழுவலாம்' என்று ஸ்மயம் சொல்லுகிறது. கிரகணத்தன்று ஒருவன் இன்ன நீரில் முழுகினல்தான் பாவம் தீர்வ துடன் பதினன்கு தலைமுறை பிதிர்கள் செய்த பாவமும் தீரும்’ என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. 'மலைகளையும் கடல்களையும் கடந்துபோய், இவ் வழகிய உலகத்தின் வியப்புகளைக் கண்டு களிக்க வேண்டும் என்று ஸ்மயம் சொல்லுகிறது. கடலைக் கடந்தவன் மண்ணிற் புரண்டு பிராயச்சித்தம் பண்ணவேண்டும் என்று கட்டுப்பாடு சொல்லு