பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதிய நாயும் முதிய மனிதனும் 105.

அறை கொடுத்தால், அப்புறம் அவனே அடிப்பதற்கு அவசியம் எழாது. லேண்டியை நோக்கி நில்லு’ என்று கத்த நேர்ந்ததா?” என்றார் ஆவர்.

ஒரே ஒரு தடவை. ’’

அது நின்றதா ? ’’

நின்றது. ’’ -

தாத்தா அதிகமான மகிழ்ச்சி பெற்றார். பையா, நான் உனக்கு மிகப் புத்திசாலித்தனமான விஷயம் ஒன்று சொல்வேன். ஒருவன் உன்மையாகவே அறிவுடையவனல்ை, நல்ல நாய் அவனுக்குக் கற்பிக்க முடியாதது எதுவும் இராது. ஆனல் மக்கு ஆசாமி கூரிய புத்தியுள்ள ஒரு நாயிடமிருந்து எதையும் கற்க முடியாது. சுறுசுறுப்புள்ள நாய் மக்குப் பேர்வழியிட மிருந்து எப்பொழுதாவது ஏதாவது கற்கக் கூடும். இதை நினைவில் நிறுத்து’ என்றார்,

இப்பொழுது என்று துவங்கினர் அவர். என்ன சொல்வார் என்பதை நான் அறிந்தேன். பறவைகளை எடுத்துப் போய் சுத்தப்படுத்து. சுடுவதற்கு நல்லதாய் இருப்பது எதுவும், உபயோகிப்பதற்கும் நல்லதுதான். ஒரு பறவையை அல்லது மீனைச் சுத்தம் செய்யும் வேலையைத் தள்ளிப்போடப் போட, அதன் கடுமை அதிகரிக்கும். சீக்கிரம் செய். இப்போது கஞ்சிய்ோடு காடைக்கறியும் வேனும் என்று எனக்கு மிகுந்த ஆசை ஏற்பட் இள்ளது. இன்றிரவு செத்துப்போவேன் என்று நான் நம்பவில்லை : என அவர் சொன்ஞர். -

மாரிக்காலம், வெறித்தனமான, குளிர்ந்த, தொல்லைதரும் மழை வீச்சோடு கழிந்தது. சூரியன் கொஞ்சம் அதிகமாய்த் தலைகாட்டத் தொடங்கியது. சுடுவதற்குக் காலம் கடந்து விட்டது. மீன்பிடிக்க இன்னும் நாள் கிடந்தது. கால்பந்து விளையாட முடியாதபடி உஷ்ணம் அதிகம். பேஸ்பால் விளை யாடவோ, மிகுந்த குளிர். முதிரா இளமையின் உணர்ச்சித் துடிப்புகளால் நான் தவித்தேன். வீடு மிகவும் சிறியதாய் தோன்றியது. சுற்றுப்புறத்தில் பள்ளிக்கூடம் தவிர வேறு எதுவுமே கிடையாது. நம்பிக்கை தரும் கோடைக் காலம் இன்னும் வெகு துரத்திலிருந்தது. என் நடத்தை, முன்மாதிரியானது என்பார்களே அப்படி இல்லை. மோசமான உதாரணமாகவே

அது அமையும்.

தாத்தா கொஞ்சம் விநோதமாக என்னைப் பார்த்தார். நான் வேலைகள் இன்றி ஊசலாடுவதை அவர் அறிந்தார். எனவே

ஒருநாள் என்னை வீட்டின் பின்தோட்டத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நாய்க் குட்டியைக் காட்டினர். துப்பு துலக்கும் நாய் அது. மிகவும் அழுமூஞ்சியாகத் தோன்றிய குட்டி நாயான அதற்குக் கர்டியின் பாதங்களைப் போன்ற பெரிய பாதங்கள் இருந்தன. ஒரு காது திருகலாய்க் காணப்பட்டது. சொறியிஞல்