பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

போவதில்லை. புருக்களை விரட்டுவதில் ஹென்ரிக்கு உதவி செய்யப் போகிறேன். நாய் உன்னுடன் இருக்கும். எடுத்து வா என்று நீ அதனிடம் சென்னுல் போதும். அதாவது, எடுத்துவர ஏதாவது இருக்குமானுல் ” இதைச் சொல்லிவிட்டு தாத்தா உரக்கஇா ஹா என்று-சிரித்தார். பிறகு, வயலின் குறுக்கே போய் புருக்களை மேலே துரத்துவதில் முனேந்தார். -

பெரியவர்கள் எல்லோரும் வயலின் ஓரங்களில், மரங்கள் அல்லது செடிப் புதர்களால் ஓர் சிறிது மறைக்கப்பட்டு, காத்திருந் தாங்கள். அரை டஜன் பேர் துரத்தினர்கள். வெகு விரை விலேயே புருக்கள் ஒசையிட்டு எழுந்தன. குறிப்பற்று எவ்வின. மேலே போக்ப்போக் வேகமுற்று, சமநிலை அடைந்தன. உடனே துப்பாக்கிகள் வெடிக்கத் துவங்கின. இங்கே பூம்-பூம், அங்கே ஆம்-பூம். அவ்வப்போது, வேகமாய்ப் பாயும் ஒரு புரு சிறகுகளைச் சிதறியபடி செங்கல் மாதிரி விழுந்தது. அல்லது சரிந்து, நீள வழுக்கிச் சிறகடித்துச் சென்றது. -

சில புருக்கள் என் பக்கமாய் வந்தன. அந்திநேரச் சூரியன் அவற்றின் செவ்விய மார்புகளில் பிரகாசித்தது. போதுமான துரம் முன்னிழுத்து அவற்றை நான் சுட்டேன். பேரோசை எழுப்பினேனே தவிர, புரு எதுவும் விழவில்லை.

வேட்டை புருக்களைக் கலக்கியது நன்கு புலயிைற்று. ஏனென்றால், நெடுகிலும் துப்பாக்கிகள் ஒலி எழுப்ப அவை குறுக்கும் நெடுக்குமாக ஓடின, முன்னுக்கும் பின்னுக்கும், வேக மாக உயர்ந்தும் பறந்தன. அதிகம் பாய்ந்தன, அதிகம் தாழ்ந்தன. வளைந்தும், வழிவிலகியும் சுழன்றன. நான் சுட்டேன். மேலும் சுட்டேன். துப்பாக்கிக் குழல்கள் சூடேறும் வரை சுட்ட்ேன். மிக்கி நாய் சற்று சினத்துடன் என்னைப் பார்த்தது.

நான் இரண்டு புருக்களை வீழ்த்தியிருந்தேன். இரண்டும் நேர்தாக்குதலில் அடிபட்டவை. இழுக்கடிக்கப்பெற்று சுட்டவை அல்ல. அதிகமான குண்டுகளுக்காகத் துழாவினேன். முதல் பெட்டியில் ஒன்றுமே யில்லை. ஆகவே நான் இருபத்தைந்து தடவைகள் சுட்டிருக்கிறேன். இரண்டு பறவைகள் கிடைத் துள்ளன. இன்னும் ஒன்றிரண்டு விழுந்திருக்கலாம். அவற்றை தாய் அப்புறம் எடுத்துவரும். -

மேலும் பத்து குண்டுகளுக்குப் பிறகு, என் அருகே தரையில் நான்கு புருக்கள் கிடந்தன-ஒன்று எனக்கு நேரே வரும் போது, சுடப்பட்டது. மற்றாென்று விலகி ஓடுகையில் சுடப்பட்டது. அதன் பிறகு என் தலையில் ஏதோ ஒரு பந்திரம் வேலை செய்தது : குறி இழுத்துச் சுடப்பட்டவை சரியாக அடிபட்டன. பறந்து சென்ற பறவைகளின் முன்னே இருபது, இருபத்தைந்து அடித்ாரம் இழுத்துச் சுட்டேன். அவை அனைத்தும் ஆலங்கட்டிகள் போல் வந்து விழுந்தன. வயல் நோக்கி வந்தவற்றைச் சுட்டேன். அவை என் காலடியில் விழுந்தன. மிக்கி சிறகுகளைத் துப்பியபடி, நாய்