பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்க்டமும் அக்டோபரும் z? s

தான்ய-தீவனமண்டி ஒன்றில் அவருக்குத் தொடர்பு இருந்தது. அதஞல் அவர் பலருக்கும் கடன் கொடுக்கும் நிலையில் இருந்தார். கஷ்ட காலத்தில் அநேக ஜனங்கள் கடனில்தான் பயிரிட்டார்கள்; கடன் வாங்கியே தங்கள் பசுக்களைப் போஷித்தார்கள் : சேமிப்பு தானியங்களைக் கூட கடனில்தான் பெற்றார்கள். ஒரு டாலர், இரண்டு டாலர் சில்லரைக் கடனுக்கும் அவர்கள் தாத்தாவை நம்பியிருந்தனர். கிறிஸ்துமஸ் சமயத்தில், கார் நிறைய ஆரஞ்சுப் பழங்களும் கற்கண்டுக் கட்டிகளும் வைத்துக்கொண்டு அவர் ஊர் சுற்றுவது வழக்கம். மூலஸ்தானத் தொடர்பு என்று இன்று சொல்லப்படுகிறதே, அதை அவர் அன்றே கொண்டிருந்தார்.

கும்பலாகச் சேர்ந்து திரிந்து, அந்திவேளையில் சோக ஒலியோடு ஒன்றை ஒன்று அழைக்கிற, புள்ளிகளுடைய சிறு காடைகளைப் பற்றி அவர் அதிக உயர்வாக எண்ணுகிறார் என்ற கருத்தைத் தாத்தா தன் நண்பர்களிடையே பரப்பத் தொடங்கும்போதே, செயலில் ஈடுபடுவார். சதுப்பருகே கொஞ்சம் கருங்கண் பட்டாணி பயிர்செய்தால் நல்லது என்று அவர் ஒரு விவசாயியிடம் கூறுவார். அறுவடையின்போது இங்கு அல்லது அங்கே கொஞ்சம் பயிர்களை விட்டுவைக்கும்படி இன்னொருவரிடம் தெரிவிப்பார். அல்லது, மேற்குப் பக்கத்தில் உள்ள துடைப்பப் புல் வயலை, அவ்வருஷம் அவனுக்கு (அந்த நிலம்) அவசியமாகத் தேவைப் படாவிட்டால், உழாமலே போட்டிருக்கும்படி அறிவிப்பார்.

சாதுவான பூனை வெறி பிடித்து அலேயும்போது, யார் அதைக் கொன்று அதன் வாலைக் கொண்டு வந்தாலும், ஒரு பூனைக்கு இரண்டு துப்பாக்கிக் குண்டுகள் தருவதாக அவர் கூறுவார். ராஜாளிகள், நரிகள், மற்றுமுள்ள நாசகார ஜந்துக்கள் பற்றியும் இவ்விதம் சொல்வார். பறவைக் கூட்டங்கள் அடிக்கடி எங்கே வந்து சேருகின்றன என்பதைக் கவனித்துவைக்கும்படியும், அவ் விதம் செய்தால் அவற்றை எங்கே தேடுவது என்று தான் அறியலாம் என்றும் அவர் ஜனங்களிடம் தெரிவித்தார்.

பதிலுக்கு, அவர் வேட்டைச் சாரணன் போல் நடந்து கொண்டார். தவறிய பன்றிகளையும், தனியாகச் சென்ற ஆடு மாடுகளையும் பிடித்துக் கொடுத்தார். பைன் மரக் காட்டில் பற்றும் நெருப்பின் பரமவிரோதி அவர். ராக்கூன் அல்லது போஸம் எப்பொழுது எதிர்ப்படினும், மரத்திலிருந்து அதைச் சுட்டு எடுத்து, அருகிலுள்ள குடும்பத்தாருக்குக் கொண்டு தருவார். பெரியவர்களுக்குக் கொடுப்பதற்கென்று அவர் தன் வேட்டை அங்கிப்பையில் சில பொடி டப்பிகளையும், துண்டுப் புகையிலையையும் வைத்திருப்பது வழக்கம்.

நல்லது, ஐயா, அதன் விளைவு என்ன? சுற்றுவட்டாரத்தில் மிகச் சிறந்த வேட்டை நிலம் எங்களுக்குக் கிடைத்தது. அது எங்களுக்கே சொந்த மென விளங்கியது. நெடுகிலும் எங்களுக்கு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எங்கள் வேட்டைப்பிராணிகளைக்