பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் ப்ரனும்

எழுப்பி, வேட்டைப் பிராணிகளை சுத்தம் செய்யத் தீர்மானித் தேன். எப்படியும் இன்னும் இரண்டுமணி நேரத்துக்குச் சிற்றுண்டி எதுவும் கிடைக்காது. நான் கோடரியை எடுத்து, கொஞ்சம் பைன் முடிச்சுகளையும், உலர்ந்த கட்டையிலிருந்து சில துண்டு. களையும் கீறி, நெருப்பு மூட்டினேன். அணில்களையும் முயலையும் வகிர்ந்த பிறகு, வாத்துக்களைக் கீறத் தொடங்கினேன். ஆப்பிள் களேயும், திராட்சை வற்றலையும் ஏற்கனவே தின்றுவிட்டேன். எனினும் எனக்கு இன்னும் பசித்தது. அதல்ை ஒரு காடைகை: எடுத்து, சிறகுகள் உரித்துவிட்டு, பச்சைக் கம்பில் குத்தி, நெருப்பில் வாட்டினேன். தீய்ந்த சிறகு நாற்றத்தோடு, சிறிது பச்சையாகவும் அது ருசித்தபோதிலும், சாப்பாட்டு நேரம் வரை பட்டினி கிடக்காமல் வயிற்றை நிர்ப்ப அதுவே போதுமானதாக இருந்தது. மிக்கி குடல்களைத் தின்றது. நாசூக்கற்ற பெட்iைநாய்தானே அது. “ ... - நான் வீடு சேர்த்ததும், வாத்துக்கள், ஒரு காடை, புரு, மூன்று அணில்கள், முயல் அனைத்தையும் சுத்தம் செய்து, துண்டு களாக்கி, ஐஸ் பெட்டியில் வைத்தேன். பிறகு என் கைகளைக் கழுவிவிட்டு, சிற்றுண்டி சாப்பிட்டேன். பன்றிக்கறியோடு சமைத்த கருங்கண் பட்டாணி, கடினமான பன்றி இறைச்சி, பிரகாசமான பொன்னிறச் சோளரொட்டி, பால், ஆப்பிள்பைஇலவங்கம் தாவியது-எல்லாம் கிடைத்தின. பிற்ப்கல் இரண்டு மணிக்கு-வழக்கமாக அந்நேரத்தில்தான் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே போவது பற்றி நான் எண்ணத் தொடங்கு வேன்-என்ன எழுப்பும்படி, சமையல்காரனை, பருத்த பெரிய வில் வசம் சொல்லிவிட்டு, சிறு துயில் பயின்றேன். துரங்கியபோது நான் புன்னகை புரிந்திருக்கவேண்டும். ஏனெனில் பிற்பகலில் நான் செய்வதற்கு இருந்ததெல்லாம் காலையில் செய்ததை மறுபடி யும், ஆளுல் தலைகீழ் வரிசையில்-முதலில் முயல்கள், அப்புறம் காடை, புருக்கள், அணில்கள், வாத்துக்கள் என்று-கவனிப்பது தான. *

இதே செயல் சிரமத்தை, ஞாயிறு தவிர்ந்த ஒவ்வொரு

திை ன்று வாரங்கள் நிறைவேற்றினேன். கிறிஸ்துமஸ் ஈவ்’ வந்தது. வாத நோயிலிருந்து குணம் பெற்றிருந்த தாத்தா, மறு

நாள் காலையில் பரிசாக மரத்தடியில் என்ன் காண்பேன் என நான் எண்ணுகிறேன் என்று என்னைக் கேட்டார். . .

பேசுவதற்கு முன், சிந்திப்பதற்காக நான் தயங்கினேனில்லை. நான் ஆசைப்படுவதற்கு எதுவுமில்லை. என் கிறிஸ்துமஸை நான் கொண்டாடிவிட்டேன். ஆஞல் எனக்குக் கெர்ஞ்சம் துப்பாக்கிக் குண்டுகள் தேவை. இருந்தவை தீரப்போகின்றன் என்றேன்.

தாத்தா சிரித்தார். ஒவ்வொரு நாளும் நான் சோர்ந்து போய், ஒரு சுமை வேட்டையோடு வீட்டுக்குத் தள்ளாடி வருவதை அவர் கவனித்திருக்கிரு.ர். இந்தத் தொத்துநோய்