பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணகத்தில் உலா

என் புதுத் துப்பாக்கியைக் கைகளில் பற்றி நான் அவர் அறைக்குள் பாய்ந்தபோது, தாத்தா தன் வயிற்றுநோய்க்கு மாற்றாக மது குடிப்பதில் முனைந்திருந்தார். கிளாசுக்கும் மேலாகப் பல்லேக் காட்டிஞர். -

‘நீ தேறி விட்டதற்கான வெகுமதி இதுதான். இவ் வேலையை நாம் தொடங்கி மூன்று வருஷங்கள் ஆகின்றன. நீ என்னையோ, உன்னையோ, நாய்களையோ சுட்டுவிட வில்லை. உனக்குச் சுதந்திரம் அளிப்பதால் ஆபத்தில்லை என்று கருதுகிறேன். ஆனல் நீ அஜாக் கிரதையாய்க் கையாண்டால் நான் அதை உன்னிடமிருந்து பிடுங் கிக் கொள்வேன் ‘ என்று அவர் சொன்னர். .

இப்போது நான் திட்டுவதற்கு அருகதை பெற்ற பெரியவன் தான். துப்பாக்கிகளைத் தவருக உபயோகித்து, ஜாக்கிரதையான பலரை மருளச் செய்துவிட்ட மடத்தன நாசகார முட்டாள்கள் அநேகரை நான் பார்த்திருக்கிறேன். ஆனல் அவர்கள் தாத்தாவை ஆசாளுகப் பெற்றதில்லையே. சில ப்ேர் வேறு சிலரைப் போல் அதிர்ஷ்டசாலிகள் அல்லர். - - - -

2

காணகத்தில் உலா

உலாவுவது அவசியம் என்ற ஆசையைத் துரண்டும் நாள் அது.

தாத்தாவும் நானும் நடக்கலாளுேம், திட்டம் அல்லது நோக்கம் எதுவுமின்றிக் காட்டுக்குக் கிளம்பிளுேம். குறிப்பாக அல்லது அவசரமாக எந்த இடத்துக்கும் போகவேண்டியது இல்லையெனில் நடப்பது இனியது தான். எங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு இடமோ அவசரமோ எதுவுமில்லை, நாங்கள் விசேஷமான எதையும் தேடிப் போகவுமில்லை.

நதியை, மணற்குன்றுகளின் மேலே ஒரு இடத்தில் நீந்தி அல்லது நடந்து கடப்பதற்கு ஏற்ற பகுதிய்ை நாடிச் செல்கையில், தாத்தா சொன்னர் : உண்மையில் இது வேடிக்கையானது தான். ஒருவன் விழித்த கண்களுடன் வாழ லாம். ஆயினும் முக்கிய விஷயம் எதையுமே கவனிப்பதில்லை. வாழ்க்கை எனும் முட்டாள்தனமான விவகாரத்தில் பெரும்பலர், கூரிய நோக்கும் அடர்ந்த வாலும் உடையவர்களாக இடறி விழுகிறார்கள். ஆளுல் காலக் கிழவன் தன் வீச்சரிவாளால் கொய்யும் வேளை வந்ததும் அவர்கள் அதிகம்ாக எதையும் பார்த்திருக்கமாட்டார்கள். அனைத் தையும் பதிவு செய்துகொண்டு பின் மறந்துவிடும் காமிரா போலில்லாமல், பலவற்றையும் பார்த்தறிவதற்கு உன்னைப் பழக்