பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

.

கரையோரம் வரும் கடற்கால் பாஸ் மீன்களையும் பிடிக்கச் சதுப்பு களைக் கலக்கிக்கொண்டிருப்பான். -

யாத்திரிகர்கள் எப்பொழுது போவார்கள் என்பதைப் பருவ நிலை அறியும். நெடிய, இரைச்சல் மிகுந்த, வாராந்தம் முடியும் வரை அது மாறுதலின்றி இனியதாய்த் திகழும். ஆனல், புதன் கிழமைக்குள் மூன்று நாளான வடகாற்று பிரமாதமாய் வீச ஆரம்பித்திருக்கும். கோடைகாலத்தில் வடகாற்று எப்பொழுதும் கிளர்ச்சி த ர க் கூ டி ய விஷயம்தான். வடகாற்றின்போது அட்லாண்டிக் கடற்கரை வெறிபெற்றும், உற்சாகமூட்டுவதாயும் விளங்கும். வானம் சாம்பல் நிறமாகிறது. காற்று கடுமையாய் வீசி மழையை விரட்டுகிறது. அலை கர்ஜிக்கிறது. அலைகள் கரை மணல்மீது சாடிச் சிதறவும், துரைப் படலங்கள் உயர்ந்து வான் நோக்கி எழுகின்றன. திடீரென்று தகர அடுப்புகள் தீவிரமாக உழைக்கின்றன. எரியிடத்தில் உள்ள கட்டை நீலமாயும் பச்சை யாகவும் எரிகிறது. கதகதப்புச் சட்டையும், பிளானல் கால் சட்டையும் அற்புத உணர்வு தருகின்றன. காலத்தால் பழுப் பேறிய சிறு பலகை வீட்டில், கோடைக் கடுங்காற்றின்போது காணப்படாத ஒரு சுகம் இப்பொழுது ஏற்படுகிறது.

மூன்று தினங்கள் காற்று அலறுகிறது. தண்ணிர் வெண்மை, பாய் கொதிப்புறுகிறது. பிறகு வருஷத்தின் சிறந்த காலம் வருகிறது. மறுபடியும் சூரியன் உஷ்ணமாய் பொன்மயமாய்த் தோன்றுகிறது. வானம் பளிச்செனத் துலக்கப்படுகிறது. ஆளுல் இப்பொழுது இளங்காற்று சுழல்கிறது. ஆகாயத்தில் ஒயின் மணம் நிறைகிறது. வெறுங்காலுடன் மீன் பிடிக்க இயலாதபடி தண்ணிர் மிகக் குளிர்ந்திருக்கவில்லை. ஆனால் நாம் தவறி விழுந்து நம்மை நனத்துக்கொண்டால், காற்றடிக்கும்போது தேகத்தில் சிலிர்ப்பு உண்டாகும். புயல் காற்று எழுப்பிய சகதிக்குழம்பல் தெளிவடையவும், மீன்கள் இரைதேடிச் சதுப்பில் வந்து குழுடி வும் தண்ணிருக்கு ஒருநாள் வேண்டும். மிகப்பெரிய மீன்கள் இன்னும் வரவில்லை. அக்டோபர் பிற்பகுதி வரை வரமாட்டா, ஆயினும் நீலமீன்கள் மூன்று ராத்தல் பருமனிலும், குட்டி முரசு மீன்கள் பதினேந்து ராத்தல் கனம் வரையிலும் காணப்படும். கடல் ட்ரெளட்டுகளும், விர்ஜினியா முல்லட்டுகளும் எப்பவும் நிறையவே உண்டு. கடற்கரை நெடுகிலும், குடாக்களின் பக்கத்தில், ஆனந்தமயமான சிறு தனி உருவங்கள் நீரில் இறங்கித் துண்டில் வீசுகின்றன ; தூண்டில் கம்பு வளையவும், பின்னுக்கு நகர்ந்து கயிற்றைச் சுற்றுகின்றன ; பிரகாசமான மீன் இந்ந்: ஒன்று ஆழமற்ற பரப்பில் இழுபட்டு வெள்ளிய மணல் மீது விழுகிறது. -

அது எங்கள் செப்டம்பர் கீதத்தின் ஒரு பகுதிதான். மற்றாெரு பகுதி ஸவுண்டில் இருந்தது. அங்கே வடகாற்று அ.ை களைச் சதுப்புப் புல்களுக்கும் மேலாக ஓங்கி எழச்செய்யும்: