பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

ஒருவன் நாற்பது வயது வரும்வாையில் கற்கத் தொடங்கு வதில்லை. அவன் ஐம்பதாவது வயதை அடையும்போது, கற்க முடிந்ததை எல்லாம் கற்றிருப்பான். அதற்குப் பிறகு அவன் சுகமாகச் சாய்ந்து, தான் கற்றதைக் கொண்டு ஆனந்திக்கலாம் ; அல்லது அதில் சிறிதைப் பிறருக்கு வழங்கலாம். அவனது பசிகள் குறைந்துவிடுகின்றன. தனது துயரத்தின் பெரும் பகுதியை அவன் அனுபவித்துவிட்டான். எனினும் முற்றிலும் வற்றிப் போகும் முன், இன்னும் ஆனந்தம் பெறுவதற்கு அவனுக்கு நிறையப் பொழுது இருக்கிறது. அதனுல்தான் நான் நவம்பரை விரும்பு கிறேன். எழுபது வயது விரை-எவருக்கும் அது போதுமான காலமே-வாழலாம் என்று எண்ணும் ஒரு நபர் தான் நவம்பர். அதாவது, புது வருஷ விழாவைக் காண சராசரிக்கு அதிகமான சந்தர்ப்பத்தோடு, அவர் நவம்பரையும் டிசம்பரையும் தாண்ட முடியும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? ‘

1 ஆமய்யா என்றேன். ஏனெனில், அதை எல்லாம் அவர் மீண்டும் விளக்குவதை நான் விரும்பவில்லை. மேலும், வேட்டை நாயகக மாறும் முதல் வாய்ப்பைப் பெறவிருந்த ஒரு சிறு நாய்க் குட்டி பற்றி நான் கவலைப்பட்டேன். பிந்திப் பெய்த மழை காடைகளின் இரண்டாவது கூட்டம் முழுவதையும் மூழ்கடிக் காமல் இருக்கவேண்டுமே என்று கவலைப்பட்டேன். சென்ற பருவத்தின் இறுதி இரண்டு வாரங்களில், கலவரமடையும் விதத்தில் பழுதுற்ற எனது குதிவைக்கும் கண்பற்றியும் கவலை கொண்டேன்.

தாத்தா, தன் கண்களைப் பாதி மூடியபடி, நவம்பர் பற்றி உன் கருத்து என்ன ?’ என்று கேட்டார்.

முக்கியமாக அது பறவைகளின் பருவம் துவங்கும் காலம் ; நன்றி அறிவிப்பு விழா நாட்கள் பெர்சிம்மன் மரங்களில் பழுத்துத் தொங்கும் ; பருவநிலை இனிதாக இருக்கும் நாட்டுப்புறத்தில் பன்றி அடிக்கும் காலம் வயலில் பூசனிக்காய்கள் மஞ்சளாய் மனேகரமாய் விளங்கும் ; சூரியன் சிவப்பாய் நன்முக இருக்கும் என்றும், இன்னும் பல விஷயங்களையும் அவரிட்ம் சொல்ல விரும்பினேன். ஆனல் அவற்றை எல்லாம் வெளியிட இயல வில்லை. பேச்சில் நான் வல்லவன் அல்லன். .

பறவைக் காலம் ‘ என்றே சொன்னேன். தாத்தா என்னைப் பார்த்து, பெருமூச்சு விட்டார். உன்னை நான் ஒருபோதும் தத்துவஞானியாக மாற்ற முடியாது என்றே எண்ணுகிறேன். நாம் துப்பாக்கிகளைப் பார்க்கப் போவோம். வேளை வந்ததும், நாளை எங்கே போவது நல்லது என்றும் யோசிப் போம் ‘ என்றார். -

பறவைப் பருவம் துவங்குவதற்கு முந்திய இரவும், பகலும் மற்ற எதையும்விட-கிறிஸ்துமஸ் விழாவுக்கு முந்திய வாரத்தை யும் விடவே-நீடித்திருக்கும். மழை வருமோ ; நாய்கள் சுடுமூக்கு