பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ், ஒய்."= மீன், 255.

ஆாசியாதிருக்கலாம். ஆயினும், நான் கேட்ட எவரையும்போலவே அவரும் ஒல் விப் கூன் ‘’, ‘ பாப் கோஸ் தி வீலல் முதலிய வைக்ளே வாசித்து உணர்ச்சி உண்டாக்கினர். -

பார்க்கப் போனல், ஒவ்வொருவரும் எதையாவது வாசித் தார்கள். சட்ட பூர்வமான காகிதத்தில் தற்குறி தவிர வேறெது வம் கீறத் தெரியாத ஜனங்கள், வாஷ்போர்டு, யூத ஹார்ப், டாஞ்சோ, மெளத் ஆர்கன் எதையாவது வாசித்து, இசை எழுப்பு வது பற்றிச் சில விஷயங்களை அறிந்திருந்தார்கள். - -

கறுப்பு நிற மக்கள் அனைவரும் கூட ஏதேனும் ஒன்றை, அல்லது இன்னென்றை, வாசிக்கக் கூடும். முகாம் கூட்டங்கள், உயிர்ப்பு நிகழ்ச்சிகள், புராதன ஆத்மீகச் சடங்குகள் முதலியவற் றில் எழும் பாடலைக் கேட்டால், அவர்கள் இன்றைய இசை முறையை எட்டிப் பிடிக்கப் போராடுகிறார்கள் என்பது புரியும். கோடெளன், மோஸ்ஸ் ‘ என்ற கீதம் நூறு நீக்ரோக் குரல் களால் பாடப்பட்டபோது எப்படி ஒலித்தது என்பதை எண்ணிப் பார்த்து, இப்பொழுது கூட நான் புல்லரிப்புப் பெற முடியும்.

அநேகமாக நாம் செய்த ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இசை இருந்ததாகவே தோன்றியது. முயல்கள், மான், கூன் ஆகியவற் றைத் துரத்திய நாய்கள் இசை எழுப்பின. அது இன்னிசையே யாகும். வேர்த்துக் கொட்டும் பெரிய படகோட்டிகள் போஜி மீன் கூட்டத்தில் கரைவலையை வீசி இழுக்கும் போது, இழுப்பைக் கணிப்பதற்காக ஹாலிஹ் !” என்று இசைப்பது வழக்கம். இதே இசையைப் பல வருஷங்களுக்குப் பிறகு நான் தங்கநியாகாவின் மத்திய பாகத்தில் கேட்டேன். விலங்கிடப்பெற்ற கோஷ்டிகள் விசேஷமான பாடல்கள் பாடினர். குற்றவாளிகள் இருப்புப் பாதை இணைப்புகளைப் பதித்து முடித்ததும், அக் கூட்டங்களைக் கண்காணிக்கும் தலைவன் இலவச இசைக் கச்சேரிகள் நிகழ்த்து வான். டர்பென்டைன் முகாம்களைச் சுற்றியுள்ள ஆற்றுத்துறைத் தொழிலாளிகள் தங்களுக்கெனத் தனியான சங்கீத-நாட்டிய நிபுணர்களைப் பெற்றிருந்தார்கள். மொத்தத்தில்-செல் வர், ஏழை, கறுப்பர், வெள்ளேயர், விலங்கிடப் பெற்றவர், சுதந்திர முடையவர் ஆகிய-நாங்கள் எல்லோருமே கொஞ்சம் சக்தி மிகுந்த இனிய சங்கீதம் சிருஷ்டித்தோம். -

சனிக்கிழமை இரவுகளில் நிகழும் சதுக்க நாட்டியங்கள் ஸ்ர் வால்டர் ராலே காலத்துக்கே பின்நோக்கிச் செல்வதாகும். சங்கீதம் மாறுதல் பெறவில்லை. ஆட்ட துணுக்கங்களும் அவ்வள வாக மாறிவிடவில்லை தான். மாகாணத்திலேயே சிறந்த கோஷ்டி அறிவிப்பாளர் டான் வார்ட் என்கிற ஒட்டிய முகமும் மெலிந்த உடலும் பெற்ற சிறிய நபர் தான். சீமாட்டிகள் மத்தியில்; சீமான்கள் சுவர் ஒரத்தில் : புகையிலை மெல்லவும் ; அனைவரும் சம நிலை எய்தவும் ‘ என்ற பாகத்துக்கு வந்ததும், அவர் தரையி லிருந்து துள்ளி தன் உயரத்தில் பாதிக்கு மேலே குதிப்பார் :