பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தாத்தாவும் பேரனும்

பொரித்த ரொட்டி மீது தாத்தா முட்டைகளை உடைத்து வைத்தார். அவற்றின் மஞ்சள் கரு கீழிறங்கி ரொட்டியை நன்கு தனத்து, துரைத்தெழுந்தது. இதல்ை ரொட்டி வாட்டி எடுத்தது போல் கர்கரவென்று இல்லாது, முட்டை, பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் பகுதி போலவே இருந்தது. உப்பிட்ட பன்றி இறைச்சித் துண்டுகளே முட்டைகளுக்குக் குறுக்கே பரப்பினர் நாங்கள் ஆளுக்கு ஆறு முட்டைகள் தின்றாேம். வெளியே, பாவத்தைப் போல் கடுங்குளிரும், அறையினுள் கதகதப்பும் திலவும் போது, இவ்விதம் சமைத்த முட்டைகளைப்போல் சுவை :உடைவை வேறெதையும் நான் அறிந்ததில்லை. அது போன்ற காப்பியை இப்போதெல்லாம் யாரும் தயாரிப்பதில்லை. தகர வடி கட்டியில் அமுக்கி வடி கட்டுவதன் மூலம் அதற்கு ஒரு தனித் தன்மையே ஏற்பட்டிருக்கும். வீடு முழுதும் காப்பியின் மணம் பரவி நிற்பதை துகரலாம்.

தாங்கள் சாப்பிட்டானதும் தாத்தா மண் ஜாடி இருந்த இடம் சென்சூர். என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினர். மிஸ் லாட்டி ஒன் தினம் தயாரித்திருந்த ரொட்டிகளில் மேலேயிருந்து இரு உஜன் திருடிஞர். இரண்டு ஆப்பிள்களும் இரண்டு ஆரஞ்சுகளும் எடுத்தார். எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டினர். தெர்மாஸ் கூஜாவை எடுத்து, மீதி இருந்த காப்பியை அதில் ஊற்றிஞர். பால் புட்டியில் குழாய்த் தண்ணீரை நிரப்பினர். தனது கட்டை யான கோட்டையும், காதுகளே மூடும்படி அமைந்த பழைய உல்லன் குல்லாயையும் அணிந்து, குழல் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, வாத்து வேட்டைக்குப் போக நாம் தயார் என்று அறிவித்தார் அவர்.

குளிர் மயமான இரவினூடே நாங்கள் நடந்தோம். வானில் வெள்ளிகள் இன்னும் ஒளி வீசியதை, ஒடும் மேகங்களுக்கு ஊடாகக் காண முடிந்தது. சாகத் தயாராகி விட்ட சந்திரனேயும், சந்தடி யற்ற வீதிகளின் வழியே ஆறு நோக்கி நடந்த நாங்கள் கண்டோம். இப்பொழுதுதான் சேவல்கள் கூவத் தொடங்கின. நாய்கள் அசைந்து கொடுத்தன ; மனமில்லாமலே குரைத்தன. ஆற்றருகே கடுங்குளிரும் கும்மிருட்டும் கவிந்திருந்தன.

தாத்தா சிறு படகை வைத்திருந்த இடத்துக்கு நாங்கள் சென்றாேம். அவர் என்னை முன் பக்கம் அனுப்பினர். பிறகு முன் புறக் கயிற்றை அவிழ்த்து, படகைக் கரையிலிருந்து உதைத்துத் தள்ளிஞர். தானே படகைச் செலுத்தப் போவதாகவும், அதன் மூலம் தன் ரத்த ஒட்டம் வுேகழ்பெறும் என்றும் அவர் சொன்னர். வெயில் ( நாம் வீடு திரும்பும்போது-அப்படித் திரும்பி வருவதாயிருந்தால்-நான் படகு ஒட்டலாம் என்றார் அவர். தாத்தா படகு வலித்து பொழுது காற்று என் முதுகில் கடுமையாக வீசியது. படகின் மூக்கு சிற்றலைகள் மீது குதித்துச் செல்கையில், துரைகள் மேலெழுந்து என் கழுத்தில் தெறித்தன. எனது உல்லன்