பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

உட்டதில்லை. வாஷிங்டனை நீங்கி, பால்டிமோர் நோக்கிக் செல்லும்போது, சுற்றுப்புற அழகு அதிகமாயிற்று ; குன்றுப் ஆாங்கும் மிகுந்தது. எண்ணிப் பார்த்தால், இன்று இங்கிலிஷ் கிராமப்புறத்தின் சரியான உதாரணம் உண்மையில் எப்படி இளங்குகிறதோ அதைவிட அதிகமாகவே மேரிலேண்ட் இங்கிலீஷ் கிராமப்புறத்தின் லட்சியமான பகுதியை ஒத்திருந்தது. அது குதிரைப் பிரதேசம். அநேகமாக ஒவ்வொரு பண்ணையிலும் பல் மைல் நீளமுள்ள வெள்ளைத் தண்டவாள வேலிகள் இருக்கும். அவற்றுள் அழகான புல் வயல்களும், சுத்தமான தொழுவங்களும், வெளிப்புற வீடுகளும் காணப்படும். வீடுகள், கரோலிளுவில் உள்ளவை போல, தட்டையான நிலப்பரப்பின் மீது வெறுமனே உட்கார்த்திரா. குன்றுகளுக்குள் ஒடுங்கி, கனத்த மரங்களினூடாக அவை எட்டிப் பார்க்கும். நெடுகிலும் பரவியிருக்கும் மேய்ச்சல் தரை, சோளப் பயிரால் பொன்னிறம் பெற்றாே, கோல்ப் வினை ஆாட்டுக் களத்தின் பிரகாசமான பசுமையுடனே திகழும். அங்கு மிங்கும் பொன்னிற, அல்லது கறுப்பும் வெள்ளையும் கலந்த மாடு க்ளோ, மேயும் சிவப்புக் குதிரைகளோ தென்படும். - மிக முன்னதாக நாகரிகம் பெற்ற மாகாணங்களில் மேரி லேண்டும் ஒன்று என நான் நினைக்கிறேன். கால்வெர்ட்டுகளைத் தொடர்ந்து வந்த இங்கிலீஷாருக்குக் காலம் நிறையவே இருந்தது. -வெகுண்டெழுந்த இந்தியர் மிகுதியாக இல்லை-ஆகவே அவர்கள் நினைவில் நின்ற இங்கிலாந்தின் பகுதிகள் போலவே இதையும் இனிதாக அமைத்தார்கள். பசுமையான ஒக் மரங்கள், ஸைப்ரஸ் நிற்கும் சதுப்புகள், முன் முற்றத்தில் நன்கு சுத்தமாக்கிய வெண் மணல், சேற்றுக் கொசுக்களும் மணல் முள்ளிகளும் நிறைந்த தணிவான நாட்டுப் பகுதி, இவற்றாேடு பழகியிராத ஒரு சிறுவ னுக்கு இதெல்லாம் ஒரு படப் புத்தகத்தில் உள்ள அற்புதமாகவே அமையும். - - -

தாத்தா தனது ஆஸ்பத்திரி அலுவல்களைக் கவனிப்பதற்குப் போதிய காலம் வரை நாங்கள் பால்டிமோரில் தங்கிளுேம். பிறகு, அவருக்கு நன்கு பழக்கமானதாகத் தோன்றிய ஒரு விடுதிக்குச் சென்றாேம். அவர், பிசுக்கேறிய பழைய தோல்பையைத் தின் சட்டைக்குள்ளிருந்து எடுத்தார். சில நோட்டுகளை எண்ணினர். தலையை அசைத்துக் கொண்டார். - -

‘ஆமைத் துவட்டல், கித்தான் முதுகு வாத்து புற்றி எல்லாம் நான் சொன்னது நினைவிருக்கிறதா ? நல்லது. அது நம்மை அநேக் மாக வறளடித்துவிடும். ஆயினும் அதை வாங்க உத்தேசிக்கிறேன். நான் அதைத் தின்பது இதுவே கடைசித் தடவையாக இருக்க லாம். ஆது பட்டியலில் இல்லை. ஆல்ை இந்த இடத்தைப் பற்றி நான் அறிந்துள்ளது. சரியென்றால், இது உறுதி : ஒன்றிரு வாத்துக் களே ஐளிலும், சில் கூட்டர்களைப் பீப்பாயிலும் போட்டு எங்கா வது ஒளித்து வைத்திருப்பார்கள் ‘ என்றார். .