பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& தாத்தாவும் பேரனும்

கால்களுக்கிடையிலும், மற்றதை என் மார்பிலும் பற்றிக் கொண்டிருப்பேன். பிறகு அவ்ரும் அதே முறையில் என் பூட்ஸைக் கழற்ற உதவி புரிவார். •

நாம் நினைவு கூறும் விஷயங்கள் விநோதமானவை ; இல்லையா ? சுருண்ட ரோமம் உள்ளே இருக்கும்படியாக, ஆட்டுத் தோவில்ை செய்யப்பட்ட ஒரு ஜதை ஸ்விப்பர்கள் என் நினைவில் எழுகிறது. நான் வீட்டுக்குள் வந்ததும் அவற்றை நெருப்பருகே காய வைப்பேன். என் வெறும் பாதங்களை அவற்றுள் திணிக்கும்போது அவை கனன்று கொண்டிருக்கும். வெந்நீர் ஸ்நானம் போல், ஒரு கப் காப்பி மாதிரி, கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு குதிரைக்குட்டி கிடைத்தது போல் உணர்வு தரும். பிறகு, உப்பையும் மீன் பிசுக்கையும், அழுக்கையும் நீக்குவதற்காக என் கைகளே வெந்நீரில் கழுவுவேன். உடனே இரவு உணவுக்கு ஆயத்தம் செய்வேன்.

தனது வயது முதிர்ச்சி காரணமாக அவரது நரம்புக்கு ஊக்க உமினிக்கும் மருந்தில் சிறிது சாப்பிட்டாக வேண்டும் ; ஒரு சிறுவன் செய்யக் கூடிய சொற்பமான காரியம் மேஜையைச் சரி செய்து சாப்பாட்டை எடுத்து வைப்பதேயாகும் என்று தாத்தா சொன்னுர். அதுவும் எனக்குப் பிடித்திருந்தது. அவரது பாதங்கள் தீயை நோக்கி நீண்டு கிடக்க, அவர் கால்களே அகலப் பரப்பியபடி நெருப்பின் முன்னே, ஆடும் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருப்பார். குழாயை உறிஞ்சியும், சிறிதே மூக்கைச் சீறிக்கொண்டும், அன்று நிகழ்ந்தவை பற்றிச் சோம்பல் ரீதியில் பேசிக்கொண்டுமிருப்பார். அட் போ, இரவு உணவுக்கு ஏற்பாடு செய்வதிகுதொல்லையே அல்ல. தகர வடிகட்டியில் காப்பிக்கு ஊற்ற வேண்டியது ; அலமாரியி விருந்து வெண்ணெயை எடுப்பதும், ரொட்டிகளைத் துண்டு பண்ணு வதும், மர்மலேட் அல்லது ஜெல்லியை எடுத்து வருவதும் தான்ே ! அடுப்பில் தீ இனிய இளஞ் சிவப்புக் கங்குகளாய் மாற ஆரம்பித் ததுமே, எங்களிடமுள்ள இரும்புப் பாத்திரத்தை அதில் வைத்து விடுவோம். முந்திய நாளின் நீலமீன் பகுதிகளே, அல்லது கடல் ட்ரெளட்டை அதனுள்ளிட அதிக நேரமாகாது. மீன்கள் உதிர்ந்து கீழே சிந்தும் சமயத்தில், உடைத்துக் குழப்பிய முட்டைகள் நிறைந்த சிறு கொப்பரையை தீ மீது வைப்பேன். இரு நொடியில் ஆகாரம் தயாராகிவிடும். -

உண்ணிகள் போல் நிறைவடைந்து, நாங்கள் வசதியாய், அமர்ந்து, இரண்டாவது கப் காப்பியைச் சுவைத்தபடி பேசிக் கொண்டிருப்போம். பிறகு தாத்தா நெருப்பை உள்ளடங்க வைத்து, விளக்கை அணைத்து விடுவார். களைப்பு, சாப்பாடு, நெருப்பு இவற்றால் பெற்ற அசதியோடு நாங்கள் படுக்கையில் புரளுவோம்.

இந்தப் பிரயாணங்கள் வார இறுதி நாட்களில் தான் நிகழும். ஏனெனில் கல்வி விவகாரம் வேறு இருந்ததே. அதனல் வாரத்தில் ஐந்து நாட்கள் எனக்கு போதிக்கப்படும். வெள்ளிக்கிழமை