உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22
சமாதானம்


1921 - ஆம் வருடம் ஜூன் மாதம் ஆரம்பத்திலேயே சில ஐரிஷ் தலைவர்கள் இங்கிலாந்தோடு சமாதானம் செய்துகொள்ள முயற்சித்த செய்தி வெளிவந்தது. ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் சமாதானம் அமுலுக்கு வரவேண்டுமென்று உடன்படிக்கையும் செய்யப்பட்டது.

தொண்டர்கள் இந்தச்சமாதானத்தில் கொஞ்சம் ஓய்வுகிடைக்கும் என்றும், பின்னர் மீண்டும் சண்டையை ஆரம்பிக்கலாம் என்றும் எண்ணியிருந்தனர். அவர்களிடம் வெடிமருந்து அதிகமாயில்லை. குண்டுகளும் குறைவு. ஓய்வுக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வெடிமருந்தை ஏராளமாய் வரவழைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் தீர்மானித்தனர். சமாதானம் பின்னால் தேசத்தைப் பிளவுபடுத்திப் பெருத்த அவமானத்தை விளைவிக்குமென்ற விஷயம் அவர்களுக்குத் தெரியாமற் போய்விட்டது. சமாதானக் காலத்தில் தான்பிரீன் தென்பகுதியிலிருந்த குடியரசுப் படையின் 'குவார்ட்டர் மாஸ்டர்' பதவியில் இருந்தான். ஆனால், பின்னால் அப்பதவியை ராஜினாமாச் செய்துவிட்டான். அக்காலத்தில்தான் அயர்லாந்து முழுவதும் சிதறிக்கிடந்த குடியரசுப் படையின் பிரிவுகள் பெருஞ்சேனைகளாக ஒன்று சேர்க்கப்பட்டன.

சமாதானக் காலத்தில் தான்பிரினும் மற்றத் தொண்டர்களும் நகரங்களில் சுயேச்சையாக நடமாட முடிந்தது. சென்ற இடமெல்லாம் ஜனங்கள் அவ்ர்களை வரவேற்று, சுதந்திர வீரர்கள் என்று பாராட்டிப் புகழ்ந்தனர். இரண்டு வரு

138