பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயர்லாந்தில் பொதுமக்கள் சபைக்கான பொதுத் தேர்தலின்போது மொத்தம் (அயர்லாந்தில்) 105 இடங்களில் 73 இடங்கள் குடியரசுவாதிகளுக்கும், 26 இடங்கள் ஐக்கியவாதிகளுக்கும், 6 இடங்கள் சுயாட்சிவாதிகளுக்கும் சிடைத்தன. இதனைத் தொடர்ந்து குடியரசுவாதிகள் பொதுமக்கள் சபையைப் பகிஷ்கரித்து டி வலெரா (De Valera) என்பவரை ஜனாதிபதியாகக் கொண்ட அயர்லாந்துக் குடியரசைப் பிரகடனப்படுத்தினர். ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றன. 1919 - 21 வரை Anglo-Irish War என வர்ணிக்கப்படும் யுத்தம் நிகழ்ந்தது.

குடியரசுப் பேராளிகள் கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பதினைந்து பேர் முதல் இருபத்தைந்து பேர் வரையான வீரர்கள் அடங்கிய குழுக்கள் ஒவ்வொரு தாக்குதலிலும் ஈடுபடுத்தப்பட்டன. மறைந்திருந்து இராணுவத்தைத் தாக்குதல், அரசின் பிரதான மையங்களைத் தகர்த்தல், அரசுப் படைகளுக்கான தொடர்புகளைத்துண்டித்தல், இராணுவத்தினருக்கான உணவு விநியோகங்களைத் தடைசெய்தல் போன்ற தாக்குதல்கள் இடம்பெற்றன. அரசுப்படை வெறிநாய்போல நடந்துகொண்டது; கிலிகொண்டது. கெரில்லாக்கள் என்ற சொல்லைக் கேட்டாலே அரசுபடை திகைக்குமளவு கெரில்லாத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்நிலையில் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறும் குடியரசுவாதிகளின் பிரதான கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதாயும் அரசாங்கம் அறிவித்தது. குடியரசுவாதிகளும் பேச்சு வார்த்தையிற் கலந்து கொள்ள முன்வந்தனர்.

பேச்சுவார்தையிற் கலந்துகொள்ள ஆர்தர் கிரிபித் (Arthur Griffith), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) ஆகிய தலைவர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு பேச்சுவார்த்தையின் கலந்துகொள்வதற்கு டி வலெராவும் சம்மதித்தார். பேச்சுவர்த்தையின்போது முழு அயர்லாந்துக்கும் சுதந்திரம் தரமுடியாதென்றும், வட அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து மதத்தினரே பெரும்பான்மையினர், ஆகையால் அது பிரிட்டனுடன் இணைந்ததொரு மாகாணமாகவே இருக்குமென்றும், கனடாவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தைப்போல (பிற்காலத்தில் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பிரிட்டிஷார் வழங்கிய சுதந்திரம் போல) பிரிட்டிஷ் முடியாட்சியின்கீழ் தென் அயர்லாந்துக்கு சுதந்திரம் வழங்கலாமெனவும் ஆட்சியாளர் குறிப்பிட்டனர். இது Irish Free State திட்டம் என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு அயர்லாந்து வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்படுவதையும், தொடர்ந்தும் பிரிட்டிஷ் முடியாட்சியின்கீழ் அயர்லாந்து இருக்கவேண்டுமென்பதையும் அயர்லாந்திற் பிரிட்டிஷ் இராணுவத்

19