பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


ஆயுதங்கள் உண்டு என்பதற்குக் கணக்கெடுத்தார்கள். கணக்குப்படி ஆயுதங்களைக் கீழே வைக்கும்படி ஆங்காங்கு இரவில் சென்று கேட்டார்கள். பலர் சமாதானமாகவே ஆயுதங்களைக் கொடுத்துவிட்டார்கள். பலர் தங்களிடமுள்ள ஆயுதங்களை விரைவாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அழைப்பும் அனுப்பினார்கள் சிலர் மட்டும் மறுத்தார்கள். மறுத்தவர்கள் மார்புக்கு நேராகத் தொண்டர்கள் துப்பாக்கிகளைப் பிடித்தவுடன், அந்த மறுப்பும் ஒழிந்தது. ஓர் உயிரையும் வதையாமலே தொண்டர்களுக்குத் தேசத்திலிருந்த ஆயுதங்களெல்லாம் வந்து சேர்ந்தன. ஆனால் அதிகாரிகள் சும்மா இருக்கவில்லை. இந்நிலை ஏற்படும் என்று தெரிந்ததால் அவர்கள் போலிஸாரை அனுப்பி ஜனங்களிடமுள்ள ஆயுதங்களை வாங்கி வரும்படி பணித்தார்கள். போலிஸார் போன இடமெல்லாம் சில நிமிஷங்களுக்கு முன்னதாகவே புரட்சி வாலிபர்கள் ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு போன செய்தியைத் தெரிந்து கொண்டு வெறுங்கையுடன் திரும்பினார்கள். இருக்கும் சர்க்காருக்கும் எதிர்காலச் சுதந்திர சர்க்காருக்கும் எவ்வளவு வித்தியாசம்!

44