பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


மாலை ஆறு மணிக்கு டப்ளினைச் சேரவேண்டியிருந்தது. அவர்கள் நூற்றுப் பத்து மைல் பிரயாணம் செய்து குறிப்பிட்ட நேரத்தில் டப்ளினை அடைந்தனர். அங்கு பில் ஷனாஹன் என்னும் நண்பனுடைய வீட்டில் தங்கியிருந்தனர். அதுமுதல் பில் ஷனாஹன், அவர்களுக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் உதவிசெய்துவந்தார்.

அவர்கள் டப்ளினிக்குச் சென்றது திங்கட்கிழமை. சனிக்கிழமைவரை அவர்களுக்கு அங்கு வேலையிருந்தது. சனிக்கிழமை காலை 8.10 மணிக்கு அதை விட்டுப் புறப்பட்டு அன்று மாலை திப்பெரரியில் கூடவிருந்த தொண்டர் படை அதிகாரிகளுடைய கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் அவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுடைய கையில் ஆறு ரிவால்வர்களும், ஐந்நூறுதுப்பாக்கிக் குண்டுகளும், ஆறு வெடிகுண்டுகளும் இருந்தன. அவ்வளவையும் சுமந்து கொண்டு அவர்கள் மற்ற அங்கத்தினர்கள் வருவதற்கு முன்னதாகவே கூட்டத்திற்கும் வந்துவிட்டனர்!

51