பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரு வார்த்தை


தான்பிரீன் என்ற ஐரிஷ் விடுதலைப் போராளி பற்றித் தமிழில் எழுதப்பட்ட வரலாற்றினை சிறையில் நண்பர்கள் யாவரும் நாவல்களைப் படிப்பதுபோல் ஆர்வத்தோடு படித்தார்கள். பலர் அதனைப் பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்கள். காகிதம், பேனா, மை எதுவும் கிடையாது. எங்களைப் போலவே இந்தப் பொருள்களும் சட்டத்தை மீறி ஜெயிலுக்குள் வந்தன.

தான்பிரீன் தானே ஒரு நூல் எழுதியிருந்தான். அயர்லாந்தின் விடுதலைக்காக எனது போர் என்பது அதன் பெயர். அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டிருந்தும் அந்த நூல் எப்படியோ கடல்களையெல்லாம் தாண்டித் தானும் சட்டத்தை மீறி, திருச்சிச் சிறைக்குள் எங்களிடம் வந்து சேர்ந்தது. அதை ஆதாரமாக வைத்துக்கொண்டே இந்த நூலை எழுதினேன்.

நான் எழுதின தாள்களையெல்லாம் ஒன்று சேர்த்து என் உயிர் நண்பர் திரு. வை. சிவராமன் என்ற சைவப்பிள்ளை, முத்துப் போன்ற தம் கையெழுத்தில் ஒரு நல்ல பிரதி எடுத்திருந்தார். அதைப்போல் வேறு சில நூல்களிற்கும் அவர் பிரதி எடுத்திருந்தார். சட்டவிரோதமான இந்தச் சரக்குகள் எல்லாம் சிறையில் நான் அடைபட்டிருந்த சிறு அறைக்குள் இருந்தன. சிறைக்காவலர்களோ (Warder) அதிகாரிகளோ கண்டால் அவைகள் யாவும் கூண்டோடு கைலாசம் போய்விடும்!

எப்படியோ பல மாதங்களாக என் புத்தக கட்டுகள் 'கான்விக்ட் வார்டர்'களும் (Convict Warder - சிறைக்காவலருக்கு உதவியாக நியமிக்கப்