பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தாமரைப் பொய்கை

பல நாள் தங்கமாட்டார் என்று நினைத்தேன். அது சரியாகிவிட்டது. அவர் கோடு உயர் பன்மலை இறங் தனர் (கடந்தனர்) ஆயினும் அங்கே அவர் நீண்ட நாள் இருக்க முடியுமா? இவளுடைய கண் துடைத் தொறும் துடைத்தொறும் கலங்கியது; அது உடைத்து எழு பெரு வெள்ளம் ஆகியது; அது அவரை அங்கே நீடும்படி விடுமா? இந்தக் கண்ணேயும் கண்ணிரை யும் அவர் கினைத்தால் போதுமே, மலே கடந்து கோடு கடந்து நாடு கடந்து இவள் கண் இழுத்து வந்து விடுமே! அது அங்கே அவரை டேவிடுமோ? என்று தானே சொல்லிக் கொள்கிருள். -

கோடுயர் பன்மலை இறந்தனர் ஆயினும், டே விடுமோ மற்றே, டுேகிணந்து

துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி உடைத்துஎழு வெள்ளம் ஆகிய கண்ணே.

(தலைவர்) சிகரங்கள் உயர்ந்திருக்கின்ற பல மலை களைக் கடந்து சென் ருரானலும், நெடுநேரம் நினைந்து(வருந்தி அழுது) துடைக்குந்தோறும் துடைக்குந்தோறும் (அடங் காமல்) கலக்கத்தை அடைந்து, கரையை உடைத்துப் பொங்கி வருகின்ற பெரிய வெள்ள மயமாக ஆகிய (இவள்) கண்கள் (தலைவரைப் போன இடத்தில்) நீண்ட நாட்கள் தங்கும்படி விடுமா?

கோடு-கொ டுமுடி. இறந்தனர்.கடந்து சென்றனர். நீட-நீட்டிக்க, நெடுநாள் தங்க. மற்று, ஏ: அசை நிலைகள். நீடு.நெடு நேரம். உடைத்து-கரையை உடைத்து. நீரினல் மறைந்து கண்ணே தெரியாமையால் வெள்ளமாகிய கண் என்ருள். ஏ. அசை நிலை. கண் நீட விடுமோ? 0.