பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்று வாழ்கிருள். முல்லை மலரைச்சூடிக்கொள்கிருள். செவி லித்தாய் கண்டு மகிழும்படி காதலனும் புதல்வனும் சேர்ந்து: இருக்க, பாணர் முல்லேப் பண்ணேப் பாட, அங்கே அவளும் ஒன்றி இருக்கிருள். t

தோழி தலைவியின் நலத்தையே தன் நலமாக எண்ணி வாழ்கிறவள். களவுக் காலத்தில் தலைவிக்கு உண்டாகும் துய ரத்தைக் கண்டு கண்டு துயரடைகிருள். தலைவன் தலைவியை மணந்து கொண்டால் நல்லது என்ற நினைவிஞல், அவன் தலே வியைச்சந்திப்பதற்காக மறைவில் வந்து நிற்கும்போது தலைவி. யிடம்,தலைவர் பொருட்டு வருந்துவானேன் என்று கேட்பவளேப். போலப் பேசுகிருள். அந்தப் பேச்சில், தலைவன் களவிலே வந்துதலேவியுடன் அளவளாவுதலோடு நிற்பவன் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிருள். அதைக் கேட்டுத் தலைவன் திருமணத்துக்கு வேண்டிய முயற்சிகளைச்செய்யட்டுமென்பதே அவள் எண்ணம். தலைவன் இவளேக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் முயற்சியிலே ஈடுபடவேண்டும்; இவள் தந்தையும் அவனுக்கு இவளேக் கொடுக்கவேண்டும்’ என்று தெய்வத்தி னிடம் வேண்டிக்கொள்கிருள். தன்னுடையதாயும் தலைவியை, வளர்த்தவளும் ஆகிய செவிலியிடம், குறிப்பாகத் தலைவி தலைவ னிடம் காதல் கொண்டுள்ளாள் என்பதைத் தெரிவிக்கிருள். தெரிவித்த பிறகு, தலைவனுடைய கல்யாணத்துக்கு விட்டார், சம்மதித்த பிற்பாடு தலைவி முன் பட்ட வருத்தத்தைச் சொல்லி, 'உன்னுல் அந்த நிலைமாறி நன்மை விளைந்தது’ என்று செவிலி ைபப் பாராட்டுகிருள். திருமணம் ஆன பிறகு தலைவனிடம், தலைவி தைரியத்தோடும் நம்பிக்கையோடும் இருந்ததைச் சொல்கிருள். ・

செவிலித்தாய் தலைவியும் தலைவனும் புதல்வனப் பெற்று. இனிதாக இல்லறம் நடத்தி இன்ப வாழ்வு வாழ்வதை, அவர் கள் வாழும் வீட்டுக்குச் சென்று கண்டு, மீண்டும் வந்து தலே வியின் தாய்க்குச் சொல்கிருள். - .

கடவுள் வாழ்த்தில் சிவபிரான் அர்த் தநாரீசராகக் காட்சி தருகிருர். நீலமேனியையும் வாலிழையையும் உடைய உமா தேவியாரைத் தம் ஒரு பகுதியிலே கொண்ட அப் பெருமான் மூன்று உலகத்தையும் உண்டாக்குகிரு.ர். - -