பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமாபாகன்

கண்ணுலே கானும் உலகம் எவ்வளவு விரிவாக இருக்கிறது ஆருயிர்கள் யாவும் உடம்பைத் தாங்கி வாழ்வதற்கு இடமாக இருப்பது இந்த உலகம். கம் முடைய கண்ணுக்குத் தெரிந்த இந்த உலகம் அல்லா மல் கமக்குத் தெரியாத பல உலகங்கள் இருக்கின்றன. இக்காலத்தில் மேன்மேலும் வளர்ந்து வரும் விஞ்ஞான ஆராய்ச்சியிலே'ஈடுபட்ட பேரறிஞர்கள் அகிலப்பிரபஞ்ச மென்பது எண்ணிக்கையில் அடங்காத அண்டங் களே உடையது என்று சொல்கிருர்கள். நாம் வாழும் பூமி நமக்கு ஒளியைத் தரும் கதிரவனே நாயகனுகக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சார்ந்தது. சந்திரன் செவ்வாய் முதலிய கிரகங்கள் பூமியின் தோழர்கள். பூமியை யன்றி மற்றக் கிரகங்களில் உயிர்கள் இருக் கின்றனவா, இல்லேயா என்பதை இன்னும் த்ெளி வாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை.

சூரியன் ஒன்றுதான் என்று ஒரு காலத்தில் கினேத் தோம். இன்று விஞ்ஞான ஆராய்ச்சியினல் பல கோடி சூரியர்கள் உண்டு என்று அறிஞர்கள் கண்டறிந்து சொல்கிருள்கள். வானத்தில் காணும். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கதிரவனும், அந்தக் கதிரவ னுக்குத் தனியே குடும்பங்கள் உண்டாம். இந்த விவரத்தை நாம் கேட்கப் புகுந்தால், நம்முடைய பூமி, அளவுக்கு அடங்காத அண்டங்களின் கூட்டத்தில் ஒரு