பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தாமரைப் பொய்கை

தோன்றச் செய்தமையால் தோன்றின என்றுதானே கொள்ள வேண்டும்? திருக்குறளில் உலகம் ஆதி பகவ கிைய முதலே உடையது என்று திருவள்ளுவர் சொல்டு முர். "ஆதிபகவன் முதற்றே உலகு”என்று அவர் கூறும் போது, உலகு எதையோ ஒரு பொருளே உடைய தென்று சொல்வது போல் இருக்கிறது. உலகம் ஒன்றை உடைய தலைமையைப் பெற்றது போலவும், ஆதிபகவன் அதனுடைய உடைமை போலவும் அந்த வாக்கியம் அமைந்திருக்கிறது. ஆனல் தலைமைப் பொருளாக சிற்பவன் இறைவன் தான். இதனே உணர்ந்த ufമേജുങ്ക് விசேடவுரையில் இந்த முதற் குறளின் கருத்தை விளக்குகிருர்,

. காணப்ப்ட்ட உலகத்தால் காணப்படாத கட வுட்கு உண்மை கூற வேண்டுதலின், ஆதிபகவன் முதற்றே என உலகின்மேல் வைத்துக் கூறினர். கூறினரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க்' என்று அவர் எழுதியிருப்பதைக் காண்க.

பெருந்தேவனர், மூன்று வகை உலகங்களும் முறையாகத் தோன்றின என்று சொல்கிரு.ர்.

மூவகை உலகமும் முகிழ்த்தன முறையே. இறைவனுடைய திருவடி நிழலின்கீழ் இவை தோன்றின என்று. சொல்ல வருகிருர். இறைவனே இவற்றைத் தோன்றச் செய்தான் என்று சொல்லி யிருக்கலாம். அப்படிச் சொல்லாமல் உலகின் செய லாக வைத்துச் சொன்னதில் கயம் உண்டு. பரிமே லழகர் சொல்வது போல, காணப்பட்ட உலகத்தால்