பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமாபாகன் 5.

காணப்படாத கடவுட்கு உண்மை கூறியதாக இருப் பது ஒன்று. மற்றென்று இறைவன் ஒரு காரியத்தை கினைத்துச் செய்தான் என்று சொன்னல் அவனுக்கு அந்தக் காரியத்தைச் செய்வதில் ஒரு தனி முயற்சி இருப்பது போலத் தோற்றும். அவனுடைய அரு ளாற்றல் எப்போதும் ஒழியாமல் நிலவுகிறது. அதன் முன் உலகம் யாவும் இயங்குகின்றன. இதற்காக அவன் பெருமுயற்சியை மேற்கொள்வதில்லே. சூரியன் தோற்றும் போது அவனுடைய முன்னிலையில் தாமரை மலர்கிறது; குமுதம் குவிகிறது. ഋതുബ് இயற்கையாக நிகழ்வனபோல அமைகின்றன. உலகி னுடைய தோற்றமும் இயல்பாக அமைவது போலத் தோற்றுகிறது. இறைவன் முயற்சி செய்யாமல் தன் அருளாணேயின் போக்கிலே உலகை முகிழ்க்கச் செய். கிருன். இதல்ைதான் அவனுடைய செயல்களே விளே யாட்டு என்று சொல்கிருேம், - .

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலேயெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யார்.அவர் தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே

என்று கம்பர் சொல்கிருர் அல்லவா

'மூவகை உலகமும்முறையாக முகிழ்த்தன என்று சொல்கிருர் புலவர். இறைவனுடைய படைப்பாகிய எதுவும் ஒழுங்கில் அடங்கியது. அதற்கு ஒரு முறை உண்டு. மனிதன் தன் அறியாமையால் முறையின்றி வாழ்கிருன். முறையின்றிச் செயல் செய்கிறன். கதிர வன் உதயமும் மறைவும், சந்திரன் தோற்றமும் மறை வும், ஐம்பெரும் பூதங்களின் கிலேயும் யாவும்