பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமாபாகன் 7

மூவகை உயிர்க் கூட்டங்களையும் சுட்டும். மூவகை உயிர்த்தொகைகளும் முறையாக, ஊழ்வினைக்கு ஏற்ற படி தோன்றுகின்றன.

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே என்பதற்கு அப்படிப் பொருள் கொள்வதும் பொருத்த மாக இருக்கும். -

உயிர்களானலும் சரி, உலகங்களே ஆலுைம் சரி, அவற்றின் தோற்றத்தில் ஒரு முறை உண்டு. அவை முறைப்படி முகிழ்க்கும். அவற்றை அப்படி முறைப்படுத்தி முகிழ்க்கச் செய்கிறவன் இறைவன்.

இறைவன் அருள் நிரம்பியவன். இறைவன் வேறு, அருள் வேறு ஆவதில்லை. ஆனாலும் அருளேத் தனியே வைத்து கினப்பதும் பேசுவதும் வழக்கமாகி விட்டன. என் உயிர் என்று சொல்கிருேம். உயிரி னின்றும் நான் வேறு அல்ல; ஆனாலும் நான் என் பது வேறு, உயிர் என்பது வேறு என்று கினைக்கும் படியாக என் உயிர் என்று சொல்வது பேச்சளவில் வங்து அமைந்துவிட்டது. அவ்வாறே அருளென்பது கடவுளே விட்டு வேருக நிற்பதில்லே யானுலும், பேச்சிலே வேருக வைத்துப் பேசுவது வழக்கமாகி விட்டது. இறைவனிடம் உள்ள அருள்தான் உலகத் தைத் தோற்றுவித்துக் காப்பாற்றி அழிக்கிறது. இறைவனிடத்திலே இயக்கம் உண்டாவதே அருளால் தான். இறைவனென்னும் செம்பொருள் ஆருயிர் இயற்றும் செயல்கள் யாவும் அருட்செயல் ←ᎦᏚᏦᏑᎶlᎢ • -