பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 . தாமரைப் பொய்கை

இறைவனைச் சிவனென்றும், அவனிடத்தில் பிரி வின்றி அவனுக்கு வேருக கில்லாமல் ஒன்றி நிற்கும் அருளேச் சக்தி என்றும் சொல்வார்கள். சிவபெருமா னுடைய அருளே சக்தி என்று ஞான நூல்கள் கூறு கின்றன. இறைவன் உலகத்தைப் படைத்தான் என்று சொல்வதையே இறைவன் அருள் உலகத்தைப் படைத்தது என்றும் சொல்வதுண்டு. நான் இதை எழுதினேன் என்று சொல்வதற்கும், என் கை இதை எழுதியது என்பதற்கும் கருத்து ஒன்றுதான். ஆன லும் சொல்லும் முறையில் வேறுபாடு இருக்கிறது. சிவபிரான் உலகத்தைப் படைத்தான், சிவபிரான் திருவருள் உலகத்தைப் படைத்தது என்று இரு வகை யாகச் சொன்னலும் கருத்து ஒன்றுதான்.

இறைவன் திருவருளேச் சக்தி என்று வழிபடுவது

வழக்கம். அந்தச் சக்தியைப் பெண்ணுருவாகக் கொண்டு அதற்கேற்ற கோலங்கள் புனேங்து ஞானப் பெருமக்கள் அன்பு செய்தனர். இறைவனுடைய

ஒரு பகுதியாக உமா தேவி எழுந்தருளியிருக்கிருள் என்று நூல்கள் சொல்கின்றன. இறைவனும் அவன ருளும் ஏற்றத் தாழ்வின்றி ஒரே அளவில் கிற்கின்றனர். அவன் எது செய்தாலும் அது அருளின் வெளியீடே.

எம்பெருமாட்டி அருளின் திருவுருவம். அப்பெரு மாட்டியின் திருமேனி நீல நிறமுடையது. எம் பெருமானுடைய இடப் பாகத்தில் ஒன்றிய அரு ளுருவப் பெருமாட்டிக்கு அமைந்த நீல நிறம் கண்ணேக் குளிர்விப்பது. அப்பெருமாட்டியின் அழகிய திரு மேனியில் ஆபரணங்கள் இலங்குகின்றன. அவற்றை