பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமாபாகன் 9.

யாரும் கையால் செய்யவில்லை. ஒருவர் முயன்று செய்தால் அதில் குற்றம் இருக்கும். பிறரால் இயற்றப் பெருமல் இயல்பாக அமைந்த தூய இழைகளை அம்மை அணிந்திருக்கிருள். நீல மேனியும் வாலிய (துாய) இழைகளேயும் படைத்த இந்தப் பெருமாட்டி இறைவ னுடைய பாகத்தில் ஒன்றி விளங்குகிருள்.

- இழையணி சிறப்பிற் பழையோள்

என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் அம்மை அணிகளே அணிந்திருப்பதை நினைக்கச் செய்கிரு.ர். -

உமாதேவி பாகத்தில் இருப்பதல்ைதான் இறை. வன் செயல் செய்கிருண்.

சிவமெ னும்பொருளும் ஆதி சக்தியொடு

சேரின் எத்தொழிலும் வல்லதாம் அவள்பிரிந்திடின் இயங்குதற்கும் அரிது

என்று சங்கராசாரியார் சொல்லியிருக்கிருர், பராசக்தி இறைவனிடத்தில் தோற்ருமல் ஒடுங்கியிருந்தால் இறைவன் எந்தச் செயலேயும் செய்தல் இயலாதாம். நன்ருகத் தாங்குகிறவன் ஏதாவது வேலை செய் வானே? மாட்டான். சிவமெனும் பரம் பொருளிடம் அருள் தோன்றில்ைதான் உலகம் முகிழ்க்கும். - பலர் சேர்ந்து இந்த உலகத்தை உண்டாக்க வில்லை. ஒருவனல்தான் உலகங்கள் தோன்றுகின்றன. அவனும் அருளோடு சாராதபொழுது அவை தோன்று வதில்லை. அவ்ன் அள்வுக்குச் சரியளவு அருள் சார்ந்தால்தான் உலகம் முகிழ்க்கிறது. அவன் பாதி, அருள் பாதி சிவன் பாதி, சக்தி ப்ாதி. இந்த இரண்டும்