பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தாமரைப் பொய்கை

சேர்ந்த ஒருவன் அவன்; இரண்டு பாதி சேர்ந்த ஒருவன், நீலமேனி வாலிழையைப் பாகத்தில் உடைய ஒருவன்; இப்படி அமைந்தவர் வேறு யாரும் இல்லாத ஒருவன், அவனுடைய தாள் கிழற் கீழே உலகங்கள் தோன்றின.

இறைவனேடு எதையேனும்தொடர்புடையதாகச் சொல்லும்போது அவனுடைய அடியோடு தொடர் புடையதாகச் சொல்வது வழக்கம். இறைவன் தொண்டர் என்று சொல்வதை விட இறைவன் திரு வடித்தொண்டர் என்று சொல்வது உயர்வு. இறை வன் திருவடிக்குப் பிழை செய்தேன் என இரங்குவது

மரபு. .

ஆதலின், இறைவனிடமிருந்து உலகம் தோன் றின என்று சொல்வதைவிட இறைவன் திருவடியி லிருந்து தோன்றின என்பது இன்னும் சிறப்பு. அதைப் பின்னும் சிறப்பாக, 'இறைவன் திருவடி நிழலின்கீழ்த் தோன்றின என்று சொல்கிருர் புலவர். நீலத் திருமேனியையும் துாய அணிகளையும் உடைய உமாதேவி அருளின் உருவம். அப்பெரு மாட்டியைத் தன் திருமேனியின் ஒருபாதியில் உடைய வன் இறைவன். எம்பெருமாட்டியோடு இணைந்த ஒருவனகிய அப்பெருமானுடைய திருவடியிணைத் தாமரை நிழலின் கீழே உலகங்கள் மூன்றும் முறை யாகத் தோற்றின.

இவ்வாறு பெருங்தேவனர் பாடுகிருர், நீல மேனி வால் இழை பாகத்து ஒருவன் இருதாள் கிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.