பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமாபாகன் 11

  • நீல நிறமுடைய மேனியையும் (பிறர் கையால் செய் யாத) தூய்மையை யுடைய அணிகளேயும் உடைய உமா தேவியை ஒரு பாகத்திலே உடைய ஒப்பற்ற இறைவனுடைய இரண்டு திருவடி நிழலின் கீழ் மூன்று வகை உலகங்களும் முறையாகத் தோற்றின.

மேணியென்பது உடம்பின் நிறத்தைக் குறிக்கும். வால் தூய:வான்மை-துாய்மை, இழை-ஆபரணம், வால் இழை-வால் இழையை அணிந்த உமாதேவி:அன்மொழித்தொகை. பாகம்ஒரு பாதி. ஒருவன்-ஒப்பற்றவன். முகிழ்த்தன.தோன்றின. முறையே-முறையாக.*

பாகம் என்பது பாதி. இந்தப் பாட்டில் அரை, ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்கள் ஒன்றன்பின் ஒன்ருக வந்து நயமாக அமைந்திருக்கின்றன.