பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைப் பொய்கை

களவுக் காதலில் சிறந்து கின்ற இளங்காதலர்க ளாகிய அவ்விருவரும் பழகும்போது இவ்வுலகத்தையே மறந்து பழகினர்கள். இத்தகைய கிலேயிலே என்றும் இருக்கலாம் என்று நினேந்தவர்களேப் போல அவர்கள் அளவளாவினர்கள். மணம் செய்து கொண்டு உல கறியக் கணவன் மனைவியராக வாழவேண்டும் என்ற எண்ணம் சிறிதேனும் அவர்களிடம் தோன்றியதாகத் தெரியவில்லை. -

ஆனல் தலேவியின் ஆருயிர்த் தோழிக்கு மாத்திரம் அந்தக் கவலே இருந்தது. ஒவ்வொரு நாளும் அவ் விரு காதலர்களும் ஒன்றுபடும்படி செய்வதில் எவ்வளவு இடையூறுகள் உள்ளன என்பதை அவள் அநுபவத்தில் உணர்வாள். ஒவ்வொரு கணமும் அவள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டவளேப்போல அஞ்சிநடுங்கு வாள். ஆயினும் காதலர்கள் வருங்கால வாழ்வைப் பற்றிக் கவலே கொள்பவர்களாகத் தோற்றவில்லை.

தலைவனுக்குக் கவலே இல்லாமல் இருப்பது வியப் பன்று. அவன் ஆடவன்; மன உறுதி உடையவன். தலைவிக்கு அல்லவா அதைப் பற்றிய கவலே இருக்க வேண்டும்? அவளுக்கு இம்மியளவேனும் தன் இல்லற வாழ்வைப் பற்றிய சிந்தனே இல்லை. திருமணம் ஆகி விட்டால் எப்படியிருப்பாளோ அப்படி அல்லவா அவள் இருக்கிருள் ? என்ன ஆச்சரியம்!