பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைப் பொய்கை 13,

தோழி நினைக்கிருள்; தலைவர் இவளே வந்து சந்தித்துச் செல்கிருரே ஒழிய, இவளே மணப்பதற்குரிய முயற்சிகளைச் செய்வதாகத் தெரியவில்லை. பரிசத்தோடு முதியவர்களே அனுப்பி மணப் பேச்சைத் தொடங்கச் செய்ய வேண்டாமோ? அவர் அவ்வாறு செய்தாலும் இவ் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவள் மணப் பருவத்தை அடைந்து விட்டதனுல், இவளே விரும்பிப் பல பேர் மணம் பேச வருவார்கள். அவர்களுக்குள் தாய் தங்தையருக்கு விருப்பமுள்ள யாரேனும் இருத்தல் கூடும். அவர்களே இவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டால் பெரிய இன்ன லாக வந்து முடிந்து விடுமே காரியம் மிஞ்சிவிட்ட பிறகு தலைவர் மணம் பேச முயன்ருல் அது எளிதிலே கை கூடுமா? இவள் கற்புக்கு இழுக்கு வந்து விடுமே! இவளுக்கல்லவா அதைப் பற்றிய கவலை இருக்க வேண்டும்? என்று அவள் எண்ணுகிருள்.

தலைவி அமைதியாக இருக்கிருள்; தலைவனே மணம் செய்துகொண்ட பிறகு எப்படி அமைதியாக இருப்பாளோ, அப்படி இருக்கிருள். -

தோழிக்கு அவள் மனநிலை விளங்கவில்லே. ஒரு நாள் தலைவியினிடமே இதைக் கேட்கிருள். - ----

"இப்படியே களவொழுக்கத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கலாம் என்று நீ எண்ணியிருக்கிருயோ?”

என்று கேட்டாள்.

தலைவி. ஏன் அப்படிக் கேட்கிருய்?