பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தாமரைப் பொய்கை

தோழி: கட்டுக் காவலுக்கு அடங்கி நிற்கும் நாம் ஒவ் வொரு நாளும் பிறர் அறியாமல் தலைவரைச் சந்திக் கிருேம். இந்தக் களவு வெளிப்பட்டு விட்டால் எத்தனே பழி உண்டாகும் என்று நீ சிந்திக்கவே இல்லையே!

தலைவி. என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிருய்?

தோழி: உலகத்தில் ஆடவரும் பெண்டிரும் எப்படி வாழ்கிருர்களோ, அப்படி வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டாமா?

தலைவி. ஆடவரும் பெண்டிரும் காதல் செய்து வாழ் கிருர்கள். அந்த நிலையில்தானே நாங்கள் இருக் கிருேம்?

தோழி: கற்புக்கு இடையூறு நேராத வண்ணம் பாது

காப்பைச் செய்துகொள்ள வேண்டாமா?

தலைவி என் கற்புக்கு இடையூறு இனி நேர வழி ஏது?

இந்த உலகமே தலே கீழானலும் என் கற்பு நிலைக்குக் குறைவோ மாறுபாடோ உண்டாகாது. இன்னும் அதன் திண்மையை நீ உணர்ந்து கொள்ளவில்லே போலும்!

தோழி: உன் கற்புக்கு மாசு வருமென்று நான் சொல்ல வில்லை. என்ன இருந்தாலும் நீங்கள் இல்வாழ்க்கை யில் ஈடுபட்ட கணவன் மனைவியராக மாட்டீர்

rö களே!

தலைவி தனி வீட்டில் மக்களுடனும் உறவினருட ஆணும் வாழ்ந்தால்தான் கணவன் மனைவியரா? அப்.