பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

தமிழில் பொருளை அகப்பொருள் என்றும் புறப்பொருள் என்றும் இரண்டு வகையாகப் பிரித்தார்கள். மற்ற மொழி களில் எழுத்தையும் சொல்லேயும் பற்றி இலக்கண நூல்கள் சொல்கின்றன. தமிழில் பொருளைப்பற்றியும் இலக்கண நூல் கள் வரையறுக்கின்றன, மிகப் பழைய இலக்கண நூல் என்று இப்போது வழங்கும் வரலாறுகளால் தெரிவது அகத்தியம். அதனே இயற்றியவர் அகத்தியர். அவர் தலைச்சங்கத்தில் இருந் தவர். தலைச்சங்கத்தாருக்கு அவருடைய நூலே இலக்கண மாக இருந்தது, அகத்தியத்தில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் தனித்தனியே இலக்கணம் இருந்தது.

நாளடைவில் இசைக்கும்நாடகத்துக்கும் தனி நூல்களாக இலக்கணம் இயற்றினர்கள் சில புலவர்கள். இடைச்சங்க காலத்தில் தொல்காப்பியர் இயற்றமிழுக்குத் தனியே இலக் கணம் இயற்றினர். அதுதான் தொல்காப்பியம். இப்போது கிடைக்கும் நூல்களுக்குள் மிகவும்பழையதாக உள்ளது அது.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பகுதிகளையும் பற்றிய இலக்கணங்களே விரிவாகப்புலப்படுத்து கிறது; ஒவ்வொன்றையும் ஒவ்வோர் அதிகாரமாக வகுத்துச் சொல்கிறது.

பொருளதிகாரம் ஒன்பது பிரிவை உடையது, அவற்றில் அகப்பொருள், புறப்பொருள், செய்யுள்,அணி, மரபு என்பவற் றைப்பற்றிய இலக்கணங்களைக் காணலாம்.

எழுத்து, சொல் என்ற இரண்டையும் பற்றித் தனியே இலக்கண நூல்கள் பிற்காலத்தில் எழுந்தன. பொருள் இலக் கணத்தைச் சார்ந்த பகுதிகளே விரித்துத் தனித்தனி நூல்கள் பலவற் ைசிப் புலவர்கள் இயற்றினர்கள். அகப்பொருள் இலக் கணம், புறப்பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணி இலக்கணம், பிரபந்த இலக்சணம், பொருத்த இலக்கணம்