பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii

என்று பல பிரிவுகளாகப் பொருளிலக்கணம் பிரிந்து தனி நூல் களில் சொல்லப் பெற்றது.

அகப்பொருள் இலக்கண்த்தைத் தொல்காப்பியத்துக்குப் பின் விரித்துச் சொல்லும் நூல்கள் வருமாறு: இறையனுர்அகப் பொருள், நம்பி அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், களவியற் காரிகை, வீரசோழியம்-பொருட்படலம், இலக்கண விளக்கம். பொருளியல், தொன்னூல்-பொருள் அதிகாரம் முதலியன.

அகப்பொருளுக்கு இலக்கியமாக உள்ள நூல்கள் பல. பத்துப்பாட்டில் உள்ள முல்லேப் பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலே என்ற மூன்றும் அகத்துறைகள் அமைந்தவை, நற்றினே, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அக நானூறு என்பவையும், பரிபாடலில் சில பாடல்களும் அகத் துறை இலக்கியங்களே. பதினெண் கீழ்க் கணக்கில் கார் நாற்பது, தினமாலே நூற்றைம்பது, தினேமொழி ஐம்பது, ஐந் தினோழுபது, ஐந்திணை ஐம்பது, கைந்நிலை என்ற நூல்களும் நாலடியார், திருக்குறள் என்பவற்றில் உள்ள காமத்துப் பால் களும் அகத்துறைகள் அமைந்தவையே. பிற்காலத்தில் எழுந்த பல கோவை நூல்களும், கிளவிக்கொத்து, கிளவி மணிமாலை என்பன போன்ற நூல்களும் அகப்பொருள் இலக்கணத்துக்கு இலக்கியமாக உள்ளவை. -

பொருளே அகமென்றும், புறமென்றும் பிரிக்கும் முறை தமிழுக்கே சிறப்பானது என்று தெரிகிறது. மக்களுக்கு உறுதி பயக்கும் பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் ஆகும். இவற்றை உறுதிப்பொருளென்றும் புருஷார்த் தமென்றும் சொல்வார்கள். இந்த நான்கில் அகப்பொருள், இன்பத்தைப் பற்றிச் சொல்வது, அறம், பொருள், வீடு என்ற மூன்றையும் பற்றிச் சொல்வது புறப்பொருள். இந்த மூன்றை யும் பற்றிச்சொன்னலும் புறப்பொருள் இலக்கணத்தில் பெரும் பாலும் பொருளின் பிரிவாகிய அரசியலைச் சார்ந்த போரோடு தொடர்புடைய செய்திசளேயே காணலாம். சிறுபான்மை வேறு செய்திகளும் உண்டு. -

காதலனும்காதலியும்ஒன்றுபட்டு இன்புறுவதைத்தலைமை யாகக் கொண்ட அகம், அவர்களுடைய உணர்ச்சிகளின்