பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'iii

வேறுபாட்டை விரித்துரைப்பது. உணர்ச்சி உள்ளத்தே எழு வது; அகத்தே அமைவது. ஆதலின் அகம் என்ற பெயர் வந் தது. ஒத்த அன்பன் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற கால்த் தில் பிறந்த பேரின்பம் அக் கூட்டத்தின் பின்னர்அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத் தமக்குப் புலகை, இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்து உணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்ருர் என்று நச்சிஞர்க்கினியர் இந்தப் பெயருக்குரிய காரணத்தைக் கூறுகிருர். உணர்ச்சியின்வேறுபாடுகள் மிகவும் நுட்பமான மெய்ப்பாடுகளால் புலப்படும். அவற்றை எளிதில் உணரவொண்ணுது. உணர்ச்சியுடையார் தம் நினைவுகளைச் சொன்னுல் ஒருவாறு அவ்வுணர்ச்சியைத் தெரிந்து கொள்ள லாம். உணர்ச்சி வசப்பட்டவர்கள் தம்முடைய செயலால் அதைப் புலப்படுத்துவதில்லை. பெரும்பாலும் செயலிழந்து நிற் பதே இயல்பு. ஆதலின் அகப்பொருள் இலக்கியமாகிய உணர்ச்சி பற்றிய கவிதைகள் அத்தனையும் கூற்றுவகையாக அமைந்திருக்கின்றன. தலைவன், தலைவி, தோழி முதலியவர் களின் கூற்றுக்களாகவே அகத்துறைப் பாடல்கள். எல்லாம் அமைந்திருப்பதைக் காணலாம்.

அறம், பொருள், வீடு என்பவற்றைப் பற்றிய செயல்கள் பலவாக இருக்கின்றன. அச்செயல்களைப்பிறர் கண்டுசொல்ல லாம். அவை புறத்தாருக்குப் புலனுகின்றன. ஆதலின் அவற்றைப் புறம் என்று சொன்னர்கள், ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாரும் துய்த்து உணரப்படுதலானும் இவை இவ்வாறு இருந்தவெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் - அது புறமெனவே படும் என்று நச்சிர்ைக்கினியர் எழுதுகிருர்.

இன்பமாகிய காமத்தை மூன்று பிரிவாகப் பிரித்தார்கள். ஆணுே,பெண்ணே யாரேனும் ஒருவர்மாத்திரம் காதல்கொள் வதைச் சொல்வது கைக்கிளே; அதை ஒருதலைக் காமம் என்றும் ஒருமருங்கு பற்றிய கேண்மை என்றும் சொல்வார்கள். சூர்ப்பணகை இராமனே விரும்பியது கைக்கிளே. வலியஇன்பம் நுகர்தல் முதலியவை பொருந்தாக் காமம், அதைப் பெருங் திணை என்பார்கள். இவைஇரண்டும்தூய அசம் ஆகர் இன்வி