பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv.

அகத்துக்குச்சிறிது புறமாக இருப்பவை. ஆதலின் இவற்றை அகப்புறம் என்றுசொல்வார்கள். தாமரையின் புறவிதழ் போல வும் வாழைப்பழத்தின் தோல் போலவும் இருப்பவை இவை, அகம் என்றே வழங்கும் காமத்தை அன்புடைக் காமம் என்று சொல்வார்கள். அதை ஐந்து திணைகளாகப் பகுத்துச் சொல்வதால் ஐந்திணைநெறி என்றும்வழங்குவார்கள். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற பெயருடைய இந்த ஐந்தையும் மூன்று வகையான பொருள்களால் புலவர்கள் விரித்துச் சொல்வார்கள். முதற்பொருள்,கருப்பொருள், உரிப் பொருள் என்பவை அவை. நிலம், சிறுபொழுது, பெரும் பொழுது என்பவை முதற்பொருளின் வகை. இன்ன இடத்தில் இன்ன பருவத்தில் இன்ன போதில் இன்ன நிகழ்ச்சி நிகழ்ந்தது. என்று அகப்பொருள் நிகழ்ச்சிகளே வருணிக்கும்போது நிலம் முதலியன வரும். அந்த அந்த நிலத்துக்கே உரிய தெய்வம், விலங்கு,பறவை,மக்கள்,பண், உணவு முதலியவற்றைக் கருப் பொருள் என்றுசொல்வார்கள். உரிப்பொருள் என்பது காதல் ஒழுக்கமாகிய நிகழ்ச்சி. இதுதான் தலைமையானது.

குறிஞ்சிக்கு நிலம் மலேயும் மலேயைச் சார்ந்த இடமும்; பெரும்பொழுது: கூதிர்காலம்.முன் பனிக்காலம்; சிறுபொழுது: நடுயாமம்; கருப்பொருள் வகைகளாவன-தெய்வம்; முருகன்; உணவு: மலே நெல், தினே, மூங்கிலரிசி முதலியன; விலங்கு: புலி, யானை, கரடி, பன்றி முதலியன; மரம்: அகில், சந்தனம், தேக்கு, வேங்கை முதலியன;பறவை: கிளி, மயில் முதலியன; பறை: தொண்டகப்பறை, முருகியம்; தொழில்: தேன் அழித் தல், கிழங்கு அகழ்தல்,தினேவிளேத்தல்,கிளிகடிதல் முதலியன; யாழ். குறிஞ்சியாழ்; பூ: காந்தள், வேங்கை, சுனேக்குவளை முதலியன; நீர் அருவி, சுனே; ஊர்: சிறுகுடி, குறிச்சி.

பாலைக்கு நிலம்தனியே இல்லை. வேனிற் காலத்தில் குறிஞ்சி நிலத்தின் சில பகுதிகளும், முல்லை நிலத்தின் சில பகுதிகளும் தம் வளப்பம் இழந்து தண்மையின்றி வெப்பம் மிக்குப் பாலே நிலமாகிவிடும். தமிழ்நாட்டில் இயற்கையாகப்பாலைநிலம்இல்லை. பெரும்பொழுது: இளவேனில், முதுவேனில், பின்பணி; சிறு பொழுது: நண்பகல்; கருப் பொருள்-தெய்வம்: காளி (இது